பாக்ஸர் படத்தில் குத்து சண்டை வீரனாக அருண்விஜய்….!!!
நடிகர் அருண் விஜய் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகி வரும் ‘ சகோ ‘ படத்தில் நடித்துள்ளார். இதனையடுத்து இவரது புதுப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பாலாவிடம் உதவி இயக்குனராக இருந்த விவேக் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார்.
இந்நிலையில் விவேக் இயக்கியுள்ள இந்த படத்தில் குத்து சண்டை வீரராக நடிக்கவுள்ளாராம். இதற்காக அருண்விஜய் மலேசியா மற்றும் வியட்நாமில் குத்து சண்டை பயிற்சி பெற்று வருகிறாராம். இவர் நடிக்கும் இந்த படத்திற்கு ‘ பாக்ஸர் ‘ என்று பெயரிட்டுள்ளனர்.