மலையாள படமான பிரேமம் படத்தின் மூலமாக மலர் டிச்சராக கிரங்கடித்து புகழ் பெற்றவர் நடிகை சாய் பல்லவி. ரசிகர்களின் மனதை கவர்ந்த அந்தப் படத்தைத் தொடர்ந்து தெலுங்கு மற்றும் மலையாளத்தில் நடித்து வருகிறார்.தமிழில் தியா படத்தின் மூலமாக தமிழ் திரையுலகிற்குவந்தார். ஆனால் இந்தப்படத்திற்கு தமிழில் எதிர்பார்த்த வெற்றி அவருக்கு கிடைக்கவில்லை.
இருந்தாலும் பரவயில்லை என்று நடிகர் தனுஷுடன் மாரி 2 மற்றும் சூர்யாவுடன் என்.ஜி.கே ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களிடயே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார். இதே நேரத்தில் தெலுங்கில் இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் படி படி லெச்சி மனசு படத்தில் நடித்து வருகிறார் சாய் பல்லவி.
மேலும் ஒரு புதிய படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார் என்பது கூடுதல் தகவலாகும்.வேணு உடுகுலா இயக்கும் அந்தப் படத்திலும் சாய் பல்லவி நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.உணர்வுப்பூர்வமான காதல் கதையில் தயாராகும் இந்தப் படத்தில் நாயகன் யார் என்ற கேள்வி எழுந்து வந்த நிலையில் இந்தப் படத்தில் நடிக்க பாகுபலி புகழ் ராணா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இந்தப் படத்துக்கு விரத பருவரம் என்று பெயரிடப்பட்டுள்ளது.இந்தப் படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்ற நடிகர் நடிகைகள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் இவர்களுடைய கமினேசன் எப்படி இருக்கப்போகிறது என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
DINASUVADU
சென்னை : தெலுங்கர்கள் அந்தப்புரத்து சேவகர்கள் என்ற நடிகை கஸ்தூரியின் சர்ச்சைப் பேச்சு தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.…
நாகப்பட்டினம் : நாகை மற்றும் திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு நாளை (நவ.06] உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்கல் சிங்காரவேலர்…
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று வருகை தந்த போது, துணை…
சென்னை : தெலுங்கு பேசும் மக்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு நடிகை கஸ்தூரி பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார். தெலுங்கர்கள் அந்தப்புரத்து…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…
அமெரிக்கா : உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு இந்திய நேரப்படி சரியாக மாலை…