கவர்ச்சி நடிகை சன்னி லியோன் இணைய தளத்தில் அதிகம் தேடப்பட்ட நடிகைகள் பட்டியலில் முதலிடம் பிடிப்பவர் . ஆபாச இணைய தள படங்கள் மூலம் பிரபலம் ஆன இவரை டேனியல் வெபர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் மணந்தார். பின்னர் பாலிவுட் படங்களில் கவர்ச்சி வேடங்களிலும், ஏ படங்களிலும் நடிக்கத் தொடங்கிய சன்னி, மெதுவாக ‘வடகறி’ படம் மூலம் தமிழ் திரையிலும் கவர்ச்சி பாடலுக்கு நடனம் ஆடினார். தற்போது ‘வீரமாதேவி’ என்ற சரித்திர பின்னணி படத்தில் வாள் ஏந்தி போராடும் வீரமங்கையாக நடிக்கிறார்.
திருமணம் முடிந்து 7 ஆண்டுகள் ஆகியும் இன்னமும் சன்னி லியோன் குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை. மாறாக 3 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். சன்னி லியோனுக்கு நேற்று திருமண நாள். இதையொட்டி தனது இணைய தள டுவிட்டர் பக்கத்தில் கணவர் டேனியல் வெபரை முறைப்படி மணந்த திருமண புகைப்படத்தை வெளியிட்டு அப்போது அவருக்கு தந்த உறுதிபற்றி குறிப்பிட்டிருக்கிறார்.
‘7 வருடத்துக்கு முன் கடவுள் முன்னிலையில் உங்களுக்கு (டேனியல்) நான் ஒரு வாக்குறுதி அளித்தேன். வாழ்க்கை என்னை எந்த சூழலுக்கு மாற்றி அழைத்துச் சென்றாலும் நம்முடைய காதல் மட்டும் மாறக்கூடாது. இருவரும் என்றைக்கும் காதலித்துக்கொண்டே இருப்போம் என்றேன். ஆனால் இன்றைய தினம் அதை மேலும் அதிகமாக உணர்கிறேன்.
அன்றைக்கு இருந்த காதலைவிட இன்றைக்கு நான் உங்கள் மீது வைத்திருக்கும் காதல் அதிகமாகியிருக்கிறது. நாம் இருவரும் இணைந்து வாழ்க்கையை ஜாலியாக அனுபவிக்கிறோம். ஐ லவ் யூ. திருமண வாழ்த்துக்கள்’ என தெரிவித்துள்ளார். சன்னியின் இந்த டுவிட்டர் மெசேஜை சிலர் விமர்சித்து கமென்ட் வெளியிட்டுள்ளனர். இன்னும் சிலர் பொருத்த மான ஜோடி என வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது , பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியுடன் பார்டர்…
தென் கொரியா : சின்சான்ஜி கிறிஸ்தவ சபையானது, 1984-ல் தென் கொரியாவின் சியோலில் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் சர்வதேச அளவில்…
விழுப்புரம் : நேற்று விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் சங்கமித்ரா திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்த…
புதுச்சேரி : புதுச்சேரி மாநில அரசின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், மத்திய அரசு புதுச்சேரி மாநிலத்தில் பெட்ரோல் டீசலுக்கு விதிக்கும்…
தூத்துக்குடி : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று நாளையும் தூத்துக்குடியில் மினி டைடல் பார்க் திறப்பு விழா, திமுக நிர்வாகிகள்…