வெற்றிமாறனின் இயக்கத்தில் வெளிவந்த வடசென்னையின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிப்பில், பாலாஜி மோகன் இயக்கத்தில் மாரி 2 படம் தயாராகி வருகிறது. இப்படம் டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிக்க இருக்கும் படத்தின் தகவலை அவரே வெளியிட்டுள்ளார்.
சமீபத்தில் வெளிவந்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவனிக்க வைத்த திரைப்படம் பரியேறும் பெருமாள். இப்படத்தில் தற்போதும் நடந்து வரும் சில சாதிய வேறுபாடுகளையும், ஆனவ கொலைகளையும் எவ்வித சமரசமும் இன்றி படமாக்கி பலரது பாராட்டுக்களை இயக்குனர் மாரி செல்வராஜ் பெற்றார்.
இந்நிலையில் நடிகர் தனுஷூம் இப்படத்தை பார்த்து விட்டு படம் பற்றி வெகுவாக பாராட்டியுள்ளார். மேலும் தனது அடுத்த படத்தை மாரி செல்வராஜ் இயக்க உள்ளார் என்றும், அதனை கலைப்புலி S.தாணு தனது V கிரியேஷன் சார்பாக தயாரிக்க உள்ளார் என்றும் தெரிவித்துள்ளார். இந்த படத்தின் கதைக்களம் ,மற்ற நடிகர்கள், நடிகைகள் விபரம் பின்னர் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Source : tamil.CINEBAR.IN
சென்னை : குட் நைட் என்ற அருமையான படத்தை கொடுத்து மக்கள் மனதில் இடம்பிடித்த மணிகண்டன் அடுத்ததாக மீண்டும் அதைப்போல ஒரு…
சென்னை :மணப்பட்டி சிக்கன் சுக்கா அசத்தலான சுவையில் செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; சிக்கன்- ஒரு கிலோ…
சென்னை : கடந்த ஜனவரி 16ஆம் தேதியன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சர்வதேச புத்தக காட்சித் திருவிழா நடைபெற்றது. …
டெல்லி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான மார்ச் 9ஆம்…
சென்னை : தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ள நிலையில், வரும் 2026…
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…