பரிசல் சவாரி வந்த சிம்புவை கரையேறும் முன்பு கண்கலங்க வைத்த ரசிகர்கள் ..!

Default Image

சேலம் கன்னங்குறிச்சி பகுதியில் 56 ஏக்கர் பரப்பளவில் மூக்கனேரி என்ற ஏரி உள்ளது. இதன்மூலம் ஏரியை சுற்றி உள்ள பகுதிகளில் விவசாய பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த ஏரியில் தற்போது தண்ணீர் நிறைந்து காணப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மதியம் 1 மணிக்கு மூக்கனேரியை பார்வையிட நடிகர் சிம்பு வந்தார்.

அவர் ஏரியில் பரிசல் சவாரி செய்து சுற்றிப்பார்த்தார். அவருடன் சமூக ஆர்வலர் பியூஸ் மானுஸ் உடன் இருந்தார். சுமார் 20 நிமிடம் ஏரியை சுற்றிப்பார்த்த அவர் பின்னர் கரை திரும்பினார். à®šà¯‡à®²à®¤à¯à®¤à®¿à®²à¯, பரிசலில் சென்று ஏரியை பார்வையிட்ட நடிகர் சிம்பு ரசிகர்கள் திரண்டதால் பரபரப்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாகவும், காவிரி தண்ணீர் பிரச்சினைக்காகவும் நான் கூறிய கருத்துகளை கர்நாடக மக்கள் வரவேற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. சேலம் மக்கள் தாமாகவே முன்வந்து ஏரிகளை தூய்மைப்படுத்தி உள்ளனர். இதன் மூலம் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

இந்த ஏரி பணிகளை சமூக வலைதளத்தில் பார்த்து, அதனை நேரில் பார்வையிட வந்துள்ளேன். ஏரி நீர் நிரம்பி காட்சி அளிப்பதை பார்க்க நன்றாக இருந்தது. நடிகர் சங்கம் தொடர்பாக எதுவும் தெரியாது. தெரிந்துகொள்ள முயற்சிக்கிறேன். எச்.ராஜா குறித்து எனது தந்தை தெரிவித்த கருத்துக்கும், எனக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறினார்..

 

பின்னர் நடிகர் சிம்பு அம்மாபேட்டை ஏரி, குமரகிரி ஏரி ஆகியவற்றை பார்வையிட சென்றார். முன்னதாக நடிகர் சிம்பு மூக்கனேரிக்கு வந்திருக்கும் தகவல் பரவியதும் ஏராளமான ரசிகர்கள் அங்கு திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. சிம்பு பரிசலில் சென்று ஏரியை பார்வையிட்ட பின்னர் கரை திரும்பியபோது, ஏராளமான ரசிகர்கள் கரையில் திரண்டு இருந்ததால் அவர் கரையில் ஏறமுடியாமல் சிரமப்பட்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்