ஐதராபாத்தில் உள்ள மூவி ஆர்ட்டிஸ்ட் அசோசியேசன் எதிரில் தெலுங்கு நடிகையான ஸ்ரீ ரெட்டி நடிகை ஸ்ரீ ரெட்டி அரை நிர்வாண போராட்டம் நடத்தி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
ஒரு சில தெலுங்கு சினிமாக்களில் நடித்துள்ள ஸ்ரீ ரெட்டி, சில காலமாக தெலுங்கு திரைப்பட ஹீரோக்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் ஆகியோர் மீது குற்றம் சாட்டி பேட்டி அளித்து வருகிறார். தெலுங்கு திரை உலகில் நடிகைகள் ஜாதி பிரச்சனை, பாலியல் தொல்லை ஆகியவற்றை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது.
மேலும் கதாநாயகர்கள் தயாரிப்பாளர்களுக்காக புரோக்கர்களாக செயல்படுகின்றனர். தெலுங்கு நடிகைகளில் 90 சதவிகிதம் பேர் பல்வேறு தொல்லைகளை சந்திக்கின்றனர். இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களின் பெயர்களை வெளியிடுவேன் என்பதால் எனக்கு கொலை மிரட்டல் விடுக்கின்றனர்.
மேலும் எனக்கு மூவி ஆர்டிஸ்ட் அசோசியேசன் உறுப்பினருக்கான அடையாள அட்டையை கூட கொடுக்க மறுக்கின்றனர் என்று கூறி வந்தார். இந்த நிலையில் இன்று மதியம் ஒரு மணி அளவில் ஐதராபாத்தில் உள்ள மூவி ஆர்டிஸ்ட் அசோசியேசன் அலுவலகத்திற்கு வந்த ஸ்ரீ ரெட்டி, அதிரடியாக மேலாடையை கழற்றி சாலையில் உட்கார்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது, ஒருபெண் ஆகிய நான் இது போன்ற போராட்டத்தில் ஈடுபட மூவி ஆர்ட்டி அசோசியேசனே காரணம் என்று குற்றம் சாட்டினார். இந்த நிலையில் அவரை ஜூப்ளிஹில்ஸ் போலீசார் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : சிபிஎம் மாநில செயலாளர் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சி…
சென்னை : பொங்கல் பண்டிகை வந்துவிட்டது என்றாலே ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்ப்பதற்கும் விளையாட நினைக்கும் வீரர்களும் குஷியாகிவிடுவார்கள் என்றே கூறலாம். இந்த…
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வரும் ஜனவரி 11-ஆம் தேதி சில மாவட்டங்களில்…
அமெரிக்கா : நடந்து முடிந்த தேர்தலில், புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம்…
குஜராத் : இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான பயிற்சி ஹெலிகாப்டர் ( ALH Dhruv ) இன்று (ஜனவரி 5)…
கோவை : கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம்,…