‘பத்மாவத்’ பட ரிலீசை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளதாக மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். இது குறித்து நேற்று அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நாங்கள் மீண்டும் சுப்ரீம் கோர்ட்டின் கதவுகளை தட்ட உள்ளோம் என்றார். அது குறித்து விரிவாக எதையும் அவர் தெரிவிக்கவில்லை. நவம்பர் மாதத்தில் ராஜபுத்திர இன தலைவர்களுடன் நடத்திய ஆலோசனைக்கு பிறகு, ம.பி.,யில் பத்மாவத் படத்தை ரிலீஸ் செய்ய அனுமதி அளிக்கப்பட மாட்டாது என அறிவித்தார். தொடர்ந்து ராஜஸ்தான், குஜராத், அரியானா உள்ளிட்ட மாநில அரசுகளும் பத்மாவத் பட ரிலீசுக்கு தடை விதித்தன. இதனை எதிர்த்து படத் தயாரிப்பாளர்கள் தாக்கல் செய்த மனுவை ஏற்ற சுப்ரீம் கோர்ட், பத்மாவத் படத்திற்கு விதிக்கப்பட்ட தடைகளை நீக்க உத்தரவிட்டது. இதனையடுத்து ஜனவரி 25ம் தேதி படத்தை ரிலீஸ் செய்வதற்கான ஏற்பாடு நடந்து வருகிறது. இந்நிலையில் பத்மாவத் பட ரிலீசுக்கு சுப்ரீம் கோர்ட் அளித்த அனுமதியை எதிர்த்து மீண்டும் சுப்ரீம் கோர்ட்டை அணுக உள்ளதாக ம.பி., முதல்வர் தெரிவித்துள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
டர்பன் : இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 4 போட்டிகள் அடங்கிய டி20 தொடரானது நடைபெற்று வருகிறது. இதன் முதல்…
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…