பத்மாவத் படத்திற்கு தடை போட முடியாது : உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!
ஒரு படம் தயாராகி இந்தியாவில் இந்தியாவில் வெளியாவதற்குள் தயாரிப்பாளரின் உசுரே போய்விடும் அளவுக்கு தணிக்கை ஒரு பாடு படுத்திவிடுகிறது. சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், சாகித் கபூர் ஆகியோர் நடித்திருக்கும் படம் பத்மாவதி.
இந்த படம் எப்போ ரிலீஸ் தேதி அறிவித்தார்களோ அப்போதே ஆரம்பித்தது இந்த பிரச்சனை படத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. சில மாநிலங்களில் இப்படம் வெளியாக தடை எனவும், இன்னும் சிலர் படத்தில் நடித்தவர்களின் தலையை வெட்டி கொண்டு வருமாறும் கூறினர்.
தற்போது தணிக்கை குழு அந்த படத்தை சில கண்டிசன்கள் விதித்து அதனை வெளியிடலாம் என அறிவித்துள்ளது. பத்மாவதி என்ற தலைப்பை பத்மாவத் என்றும், மேலும் 20-க்கும் மேற்பட்ட கட்களை சொல்லி அதனை எடுத்தால் படத்தை வெளியிடலாம் என தணிக்கை குழு அறிவித்தது.
இதனைத்தொடர்ந்து இப்படமானது இன்று பிப்.23 வெளியிடப்படம் என படக்குழு முடிவு செய்தனர். பின்பு ராஜஸ்தான், மத்திய பிரதேசம் அகிய மாநிலங்களில், பத்மாவத் திரைப்படத்திற்கு தடை விதிக்கக் கோரி இரு மாநில அரசுகளும் உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு அளிக்கப்பட்டுள்ளது. பத்மாவத் திரைப்படத்திற்கு அனுமதி அளித்த உச்சநீதிமன்றத்தின் முந்தைய உத்தரவை மாற்ற கோரிக்கை வைத்துள்ளதாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கானது இன்று விசாரணைக்கு வந்தது.வழக்கை விசாரித்தபின் நீதிபதிகள் இப்படத்தின் வெளியீட்டை தடை செய்யமுடியாது என அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது.மேற்சொன்ன மாநிலங்கள் அனைத்திலும் பிஜேபி கட்சியின் ஆட்சியில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.