பூபதி பாண்டியன் இயக்கத்தில் விமல் ஹீரோவாக நடித்துள்ள படம் ‘மன்னர் வகையறா’. இந்தப் படத்தில் ‘கயல்’ ஆனந்தி ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படம் நாளை வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் கணேசன் நடிகர் விமல் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது, “ஜி.கே.ஸ்டூடியோ நிறுவனம் சார்பில் ‘மன்னர் வகையறா’ என்ற பெயரில் புதிய படம் தயாரித்துள்ளோம். அந்த படத்தின் கதாநாயகனாக நடிகர் விமல் நடித்துள்ளார். குடியரசு தினத்தன்று படம் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் எனது பெயர் இல்லை. நான் ரூ.1.75 கோடி படத் தயாரிப்புக்கு செலவு செய்துள்ளேன். எனக்கு ரூ.2.15 கோடி, படம் வெளியானவுடன் தர வேண்டும், என்ற ஒப்பந்தம் உள்ளது. ஆனால் எனக்கு அந்த பணத்தை கொடுக்காமல் விமல் உட்பட 3 பேர் ஏமாற்ற முயற்சி செய்கின்றனர். எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தினை வாங்கி தருமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறப்பட்டுள்ளது
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…