Categories: சினிமா

படமாகிறது மலாலாவின் வாழ்க்கை வரலாறு..!!

Published by
kavitha

அமைதிக்கான நோபல் பரிசை வென்ற  மலாலாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட இருக்கிறது.

இயக்குநர் அம்ஜத் கான் ’குல் மக்காய்’ என்ற பெயரில் மலாலாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கி வருகிறார்.  ‘குல் மக்காய்’ என்ற பெயரில் தலிபான்களுக்கு எதிராக எழுதி வந்ததால் அதையே இப்படத்திற்கு தலைப்பாக படக்குழுவினர் வைத்துள்ளனர்.

இப்படத்தில் மலாலாவின் கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரம் ரீம் சேக் நடிக்கிறார். மேலும் அதுல் குல்கர்னி, திவ்யா தத்தா, அபிமன்யூ சிங், முகேஷ் ரிஷி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.  மலாலவின் வீடு அவர் படித்த பள்ளி ஆகியவற்றை 16 கேமிராக்களின் உதவியோடு படமாக்கியுள்ள படக்குழு காஷ்மீரின் சில இடங்களிலும் படப்பிடிப்பை நடத்தியுள்ளது.

கடந்த 2012-ம் ஆண்டு பள்ளிப்பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த சிறுமி மலாலா மீது தலீபான்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். பெண்கல்வியை வலியுறுத்தி மலாலா பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்ப்பாளர்கள் இந்த தாக்குதலை நடத்தியதாக அப்போது கூறப்பட்டது. இதில் படுகாயமடைந்த மலாலாவிற்கு லண்டனில் சிகிச்சை அளிக்க்ப்பட்டது. அதன் பின்பு குணமடைந்த மலாலா கடந்த 2014 – ம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார். மிகச்சிறிய வயதில் நோபல் பரிசு பெற்றவர் என்ற பெருமையும் இவரையே சேரும் .

மலாலாவின் வாழ்க்கை வரலாற்று படத்தை உலகம் முழுவதும் வெளியிட திட்டமிட்டிருக்கும் படக்குழுவினர் இப்படத்தின் முதல் நாள் வசூல் தொகையை மலாலா நிதிக்காக வழங்க உள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Recent Posts

மாணவி பாலியல் விவகாரம் – சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியது என்ன?

சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த பாலியல்…

14 minutes ago

திருவாதிரை களி ரெசிபி அசத்தலான செய்முறை இதோ..!

சென்னை :திருவாதிரை ஸ்பெஷல் களி  ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி-…

30 minutes ago

தனுஷ் – நயன்தாரா வழக்கு… இறுதி விசாரணையை ஒத்தி வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்!

சென்னை: நடிகை நயன்தாராவின் 'Beyond the Fairy Tale' ஆவணப்படத்தில் 'நானும் ரவுடி தான்' படத்தின் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக்…

43 minutes ago

கிளப்பில் கலக்கும் யாஷ்… பிறந்தநாள் ட்ரீட்டாக வெளிவந்த ‘டாக்ஸிக்’ க்ளிம்ப்ஸ் வீடியோ!

சென்னை: ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் 'KGF 2' திரைப்படம் கடந்த 2022ம் ஆண்டு வெளியானதைத் தொடர்ந்து அவரது அடுத்த…

44 minutes ago

பொல்லாத ஆட்சிக்கு சாட்சியே பொள்ளாட்சி சம்பவம் தான் – முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில்,  அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த…

2 hours ago

‘3 மாதத்தில் மகளிர் உரிமைத்தொகை’ துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

சென்னை: மகளிருக்காக தமிழக அரசு சார்பில் 'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை' திட்டதின் கீழ், ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி மகளிர்…

2 hours ago