“படபிடிப்பை நிறுத்த செய்த வெள்ளம்” நடிகர் கார்த்தி பேட்டி..!!
பயங்கர வெள்ளம் – நின்றுபோன கார்த்தியின் தேவ் படப்பிடிப்பு
ரஜத் இயக்கத்தில் கார்த்தி – ரகுல் ப்ரீத்தி சிங் நடிப்பில் உருவாகி வரும் `தேவ்’ படத்தின் படப்பிடிப்பு குலு மணாலியில் நடக்கவிருந்த நிலையில், கடும் மழை வெள்ளத்தால் படப்பிடிப்பு தடைபட்டுள்ளது.
`கடைக்குட்டி சிங்கம்’ படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தி தற்போது அறிமுக இயக்குனர் ரஜத் இயக்கத்தில் கிரைம் த்ரில்லர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கார்த்தி ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்து வருகிறார்.
மேலும் கார்த்திக், பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே. விக்னேஷ், அம்ருதா, ரேணுகா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் `தேவ்’ படத்தின் படப்பிடிப்பு குலு மணாலியில் நடைபெற்று வந்தது. அதற்காக படக்குழு குலு மணாலி சென்றிருந்தது.
இந்த நிலையில், கனமழை, பயங்கர வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் தேவ் படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. படக்குழுவினர் 140 பேர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி தவித்து வருகிறார்கள். இதுபற்றி நடிகர் கார்த்தி கூறும் போது,
23 வருடங்களுக்கு பிறகு ஏற்பட்டுள்ள இந்த நிலச்சரிவால் மக்கள் பயன்படுத்தி வந்த பாதைகளுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த பாதைகள் சரி செய்யப்பட கண்டிப்பாக 28 மணி நேரம் தேவைப்படும் என்றும், அது வரை படக்குழுவினாரால் கீழே இறங்க முடியாது என்றும் நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார். இந்த பாதிப்பால் தயாரிப்பாளருக்கு சுமார் 2 கோடி ரூபாய் வரை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
DINASUVADU