பக்குவம் இல்லாத நடிகைகள் : குற்றம் சாட்டுகிறார் சதா…!!!
நீண்ட இடைவெளிக்கு பிறகு, டார்ச்லைட் படத்தில் நடித்திருக்கிறார் சதா. அடுத்து நடிக்கும் பாம் குறித்து அவர் கூறியதாவது : டார்ச்லைட் படத்தில் பாலியல் தொழிலாளி வேடத்தில் நடிக்க பல நடிகைகள் தங்கியதாக கேள்விப்பட்டேன். எதற்கு அப்படி தயங்கினார்கள் என்று தெரியவில்லை. படத்தில் இடம்பெறும் கேரக்டரை, ஒரு கேரக்டராக பார்க்கும் பக்குவம் இன்னும் பல நடிகைகளுக்கு வரவில்லை என்பதைத்தான் இந்த சம்பவம் எனக்கு உணர்த்துகிறது.
நான் மும்பையில் வசிக்கிறேன். ஷூட்டிங் முடிந்ததும் வீட்டுக்கு சென்றுவிடுவேன். விருந்து மற்றும் கேளிக்கை நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டேன். அப்படி பங்கேற்றால் தான் பட வாய்ப்பு கிடைக்கும் என்று சொல்வதை ஏற்க மாட்டேன்.
யாரையும் நான் காதலிக்கவும் இல்லை. அதனால், என் திருமணம் குறித்து இப்பொது எந்த முடிவுமெடுக்கவில்லை. தொடர்ந்து சினிமாவில் நடிப்பேன்.