பகத் பாசிலை விட உதயநிதி ஸ்டாலின் நல்ல நடிகர் : இயக்குனர் பிரியதர்ஷன்

Default Image

மலையாளத்தில் நல்ல நடிகர் என்ற பெயரையும், தனெக்கென தனி ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளவர் பகத் பாசில். இவர் தமிழ் சினிமாவில் தற்போது வேலைக்காரன் படம் மூலம் அறிமுகமாகியுள்ளார். அந்த படமும் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.
தமிழ் சினிமாவில் ஓகேஓகே படம் மூலம் அறிமுகமாகி அடுத்தடுத்து சந்தானத்தை வைத்து பிழைத்து கொண்டிருந்தவர் மனிதன் படம் மூலம் தன்னை நடிகனாக நிலை நிறுத்திகொண்டவர் உதயநிதி ஸ்டாலின். அவர் தற்போது பிரியதர்ஷன் இயக்கத்தில் மலையாளத்தில் ஹிட் ஆகிய மகேஷிண்ட பிரதிகாரம் என்ற படத்தை ரீமேக் செய்து நடித்து கொண்டு இருக்கிறார். இயக்குனர் பிரியதர்ஷன், பகத் பாசிலை வைத்து படங்கள் இயக்கி உள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில், நிமிர் பட ஷூட்டிங் அனுபவங்களை சொல்லும் போது உதயநிதி சில நாட்கள் ஷூட்டிங் சென்ற பிறகு நன்றாக நடிக்கிறார். மேலும் நடிகர் பகத் பாசிலை விட நன்றாக நடிக்கிறார் என்று தோன்றுகிறது என  தெரிவித்துள்ளார். இந்த படத்திற்கு பிறகு உதயநிதிக்கு நல்ல படங்கள் அமையும் என தெரிவித்துள்ளார்.
source  : dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்