நிறுத்தப்பட்ட இந்தியன் 2 படப்பிடிப்பு வேலைகளை விரைவில் துவக்க முடிவு….!!!

Default Image

இந்தியன் 2 படப்பிடிப்பு வேலைகள் நிறுத்தப்பட்ட நிலையில், இதன் வேலைகள் விரைவில் துவக்க முடிவெடுத்துள்ளனர்.

இந்தியன் 2 வேடத்துக்கான மேக்கப்பில் ‌ஷங்கருக்கும் கமலுக்கும் திருப்தி ஏற்படாததால் தான் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கமல்ஹாசன் மற்றும் காஜல் அகர்வால் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. அந்த காட்சிகளை பார்த்த ‌ஷங்கரும், கமலும் மேக்கப் இயல்பாகவும், பொருத்தமாகவும் இல்லை என்று கருதி இருக்கிறார்கள்.

இதனையடுத்து, படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். அடுத்த வாரம் அமெரிக்கா செல்லும் ‌ஷங்கர் அங்குள்ள மேக்கப் கலைஞர்களுடன் ஆலோசனை நடத்தி மேக்கப் டெஸ்ட் எடுக்க உள்ளார். மேக்கப் பொருந்திய பின்னர் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்