35 வயதாகும் நடிகை ப்ரியங்கா சோப்ரா, 25 வயதாகும் பாலிவூட் பாப் பாடகர் நிக் ஜோனஸ் என்பவரை காதலித்து வந்தார். இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்தனர். இதற்கிடையே ‘பாரத்’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார்.
ஆனால் சில தனிப்பட்ட காரணங்களால் படத்திலிருந்து விலகுவதாக திடீரென தெரிவித்தார். இந்த செய்தி ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து தனது திருமணத்தையொட்டியே படத்திலிருந்து ப்ரியங்கா விலகியதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் கடந்த இரு நாட்களுக்கு முன் பாப பாடகர் நிக் ஜோனாஸ் மற்றும் ப்ரியங்கா ஆகியோருக்கு இரு ன் குடும்பத்தினர் முன்னிலையில் மும்பையில் நிச்சயதார்த்தம் நடைப்பெற்றது. இந்த செய்தி அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்திருக்கும் நிலையில், மேலும் இன்ப அதிர்ச்சி தரும் விதமாக பிரியங்காவின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
2013ம் ஆண்டு வெளியான ‘கிரிஷ் 3 ‘ படத்தில் ஹிருத்திக் ரோஷனுக்கு ஜோடியாக ப்ரியங்கா நடித்திருந்தார். இதனைத்தொடர்ந்து ‘கிரீஸ் படத்தின் நான்காம் பக்கத்தில் மீண்டும் கிறித்து ரோஷனுக்கு ஜோடியாக நடிப்பதற்கு ப்ரியங்கா சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.
இதன்மூலம் கிரிஷ் படவரிசையில் ப்ரியங்கா இணைவது இது மூன்றாவது முறையாக அமையும். இதுகுறித்து அதிகாரபூர்வ தகவல் வெளியாகவில்லை. படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் எனவும், 2020 வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஜெர்மனி : கிருஸ்துமஸ் பண்டிகை நெருங்கியுள்ள நிலையில், வெள்ளிக்கிழமை மாலை ஜெர்மனியின் மாக்டேபர்க் கிறிஸ்துமஸ் சந்தையில் மக்கள் பலரும் சந்தோசமாக தங்களுக்கு…
கேப் டவுன் : மிகவும் நல்ல ஆட்டக்காரர் ஆனால் கோபம் தான் கொஞ்சம் அடிக்கடி வரும் என்கிற வகையில், தென்னாப்பிரிக்கா அதிரடி…
சென்னை : இயக்குநர் வெற்றிமாறன் ஆடுகளம் படத்தில் நாங்க பன்னா தரமா இருக்கும் ஊருக்கே தெரியும் என்ற வசனத்தை வைத்திருப்பார். அந்த…
சென்னை : துணை வேந்தர் நியமனம் தொடர்பான தேடல் விவகாரத்தில், மாணவர்களின் நலன் கருதி பல்கலைகழக மானிய குழு உறுப்பினரை…
டெல்லி : சமாஜ்வாதி கட்சியின் எம்பி ஜியா உர் ரஹ்மான், மின்சார திருட்டு குற்றச்சாட்டின் அடிப்படையில் அவருக்கு உத்தரபிரதேச பவர்…
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது.இந்த…