நா ரொம்ப ஜாலியான பொண்ணு ஆனா ஒன்னு! என்ன கூறினார் பார்வதிநாயர்..!
என்னை அறிந்தால், உத்தம வில்லன் என்று கமல், அஜித் படங்களில் நடித்ததவர் பார்வதி நாயர். மலையாளத்தில் மோகன்லாலுடன் நீரலி படத்தில் நடித்துக் கொண்டிருந்தவருடன் மாலைமலருக்காக பேசினோம்.
கமல், அஜித் இப்போது மோகன்லாலா?
பெரிய நடிகர்களுடன் தான் நடிப்பேன் என்று இல்லை. ரொம்ப தேர்ந்தெடுத்து என் கதாபாத்திரங்கள் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று திட்டமிட்டு நடிக்கிறேன். பெரிய நடிகர்கள் உடனும் பெரிய இயக்குநர்களுடனும் தொடர்ந்து வேலை பார்ப்பது சந்தோஷம் தான். ஆனால் என்னுடைய கதாபாத்திரம் தான் முக்கியம். என்னுடைய படங்களை பார்த்தாலே இது புரியும். என்னை சந்திக்கும் ரசிகர்களின் விமர்ச்னங்களுக்கு நான் முக்கியத்துவம் தருகிறேன்.
மாடலிங்கில் இருந்து சினிமாவுக்கு வந்ததால் உடல் வாகை அப்படியே பராமரிக்கிறீர்களா?
நான் இன்னமும் மாடலின் செய்துகொண்டுதான் இருக்கிறேன். ஆனால் உடல்வாகுக்கும் அதற்கும் தொடர்பு இல்லை. நான் எந்த உணவுக் கட்டுப்பாடும் கடைப் பிடிப்பதில்லை. நன்றாக சாப்பிடுவேன். தென்னிந்திய சினிமாவை பொறுத்தவரை கொஞ்சம் குண்டாக இருந்தால் தான் ரசிகர்களுக்கு பிடிக்கும். இப்போது ஒரு ஆக்ஷன் படத்துக்காக உடம்பை ஒல்லியாக்கி இருக்கிறேன். அதனால் வேறு ஒரு படத்தை இழந்தேன். சாப்பாட்டில் எனக்கு தமிழ்நாட்டு தோசை ரொம்ப பிடிக்கும். சரவணபவன் மசாலா தோசை சென்னையில் மறக்காமல் சாப்பிடும் உணவு.
ஓவியத்தின் மீது ஆர்வம் வந்தது எப்படி?
சின்ன வயதில் இருந்தே ஓவியத்தில் ஆர்வம். அம்மா நன்றாக வரைவார். வீட்டில் அம்மா வரைந்த ஓவியங்கள் இருக்கின்றன. ஒருவேளை மரபணுவிலேயே வந்திருக்கும்போல… சூழ்நிலை அமையவில்லை. அமைந்து இருந்தால் ஓவியம் தொடர்பாகவே படித்திருப்பேன்.
ஓவியத்துக்கு பொறுமை அவசியம் தேவைப்படுமே?
எனக்கு வாழ்க்கையில் பொறுமை இருக்காது. உங்களிடம் பேசும்போதுகூட நடந்துகொண்டு தான் இருக்கிறேன். ஆனால் ஓவியம் வரையத் தொடங்கினால் நான் வேறு ஒரு உலகத்துக்கே சென்றுவிடுவேன். அந்த பார்வதி எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் பொறுமை காப்பாள்.
எப்படிப்பட்ட படங்களில் நடிக்க ஆசை?
நான் ஆசைப்பட்ட வேடங்களில் இதுவரை நடிக்கவில்லை. இன்னும் நல்ல வேடங்கள் கிடைக்க வேண்டும். என்னுடைய உண்மையான சுபாவம் இதுவரை திரையில் வெளிப்படவே இல்லை. நான் ரொம்ப ஜாலியான பொண்ணு. ஆனா படங்களில் தொடர்ந்து சீரியஸான வேடங்கள் தான் கிடைக்கின்றன
கமல் அரசியல் கட்சி தொடங்கியுள்ளாரே… அழைப்பு வந்தால் செல்வீர்களா?
எனக்கு அரசியலில் சுத்தமாக ஆர்வம் கிடையாது. ஆனால் அரசியல் தொடர்பான புத்தகங்கள் படித்துக்கொண்டிருக்கிறேன். இன்னும் சிலகாலம் போனால் தான் எனது அரசியல் பார்வைகள், அபிப்ராயங்கள் பற்றி பேச முடியும். யாரை ஆதரிப்பது என்று இன்னும் முடிவு செய்யவில்லை. ஆனால் மக்களுக்கு நல்லது செய்யும் நேர்மையான தலைவரை தான் ஆதரிப்பேன்.
தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மூன்று மாநிலங்களும் தொடர்புடையவர் நீங்கள். இந்த 3 மாநிலங்களுக்குள்ளும் நிலவும் தண்ணீர் பிரச்சினை?
காவிரி தொடர்பான செய்திகளை படிக்கிறேன். இதில் ஆலோசனை சொல்லும் அளவிற்கு நான் பெரிய ஆள் கிடையாது. ஆனால் இது முழுக்க முழுக்க அரசியல்வாதிகளின் சுயலாபத்துக்கு நடத்தப்படும் நாடகம். இன்று மாநில எல்லைகளை மறந்து மக்கள் திருமணம் கூட செய்துகொள்கிறார்கள். தண்ணீர் கொடுப்பதற்கு எந்த மக்களும் தயங்க மாட்டார்கள்.
உங்க ரோல் மாடல் யார்?
ஒவ்வொருத்தர் கிட்டேருந்தும் ஒவ்வொண்ணு எடுத்துக்குறேன். ஆனா மாதுரி தீட்ஷித், ஷோபனாகிட்டருந்து அதிகம்.
பிடிச்ச ஹீரோ, ஹீரோயின்?
அஜித் தான். முன்னாடியே பிடிக்கும். இப்ப ரொம்ப பிடிக்குது. ஹீரோயின்ல நயன்தாரா