நாம் தனி தனியாக இருப்பதே சிறந்தது! ஸ்ருதிஹாசனை விட்டு பிரிந்த அவரது காதலர்!
நடிகை ஸ்ருதிகாசன் கமலஹாசனின் மகள் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இவர் தமிழ் சினிமாவின் பிரபலமான பாடகி, தொகுப்பாளர், டான்சர் என பல திறமைகளை தன் வசம் கொண்டவர்.
இந்நிலையில், ஸ்ருதிஹாசன் வெளிநாட்டு நடிகரான மைக்கேல் கார்சேல் என்பவரை காதலித்து வந்தார். இவர் தனது காதலரை பார்ப்பதற்காகவே அடிக்கடி வெளிநாடு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்.
இந்நிலையில், ஸ்ருதியின் காதலர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், “உலகத்தில் நீ ஒரு மூலையில் இருக்கிறாய், நான் ஒரு மூலையில் உள்ளேன், நாம் தனி தனியே செல்வது தான் சரியாக இருக்கும் என எண்ணுகிறேன்.” என்று அவர்கள் இருவரின் புகைப்படத்துடன் இந்த பதிவினை பதிவிட்டுள்ளார்.