நான் தலைவரானால் நன்றாக இருக்கும்..! என்று ரஜினி சொன்னார் – பாக்யராஜ்
நடிகர் சங்க தேர்தலில் பாக்யராஜ் அணிக்கு சுவாமி சங்கரதாஸ் அணி என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
தென்னிந்திய நடிகர்சங்க தேர்தலில் பாண்டவர் அணி மற்றும் சுவாமி சங்கரதாஸ் அணி இடையே கடும் போட்டி நிலவுகிறது.
நடிகர் சங்க தேர்தலில் பாக்யராஜ் அணிக்கு சுவாமி சங்கரதாஸ் அணி என பெயர் சூட்டப்பட்டுள்ளது.இது குறித்து செய்தியாளார்களை சந்தித்த சுவாமி சங்கரதாஸ் அணியினர் கடந்த ஒன்றரை ஆண்டாக நடிகர் சங்க கட்டடம் கட்டும் பணிகள் பாதிப்பு என்பதால் தான் சுவாமி சங்கரதாஸ் அணி உருவாகியுள்ளது.
மேலும் தென்னிந்திய சங்கத்துக்கு நான் தலைவரானால் நன்றாக இருக்கும் என்று ரஜினி கூறினார் என்று பாக்யராஜ் தெரிவித்தார்.மேலும் அவர் கூறுகையில் விஷால் தலைமையிலான பாண்டவர் அணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. சவுகிதார் எனக் கூறி மோடி தேர்தலை சந்தித்தது போல நாங்களும் நடிகர் சங்கத்தை பாதுகாக்க வந்துள்ளோம்.
மேலும் நடிகர் சங்க தேர்தலில் எந்தவிதமான அரசியல் தலையீடும் இல்லை என்று கூறிய அவர் நடிகர் சங்க தேர்தலில் பொதுச்செயலாளர் பதவிக்கு விஷாலை எதிர்த்து ஐசரி என்று கணேஷ் போட்டியிடுகிறார் அதே போல் பொருளாளர் பதவிக்கு நடிகர் கார்த்தியை எதிர்த்து நடிகர் பிரசாந்த் போட்டியிடுகிறார் என்று தெரிவித்தார்.