நான் என் வழியில் செல்கிறேன் : நடிகை பரபரப்பு வாக்குமூலம்..!
மறைந்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூரை தென்னிந்திய சினிமாவில் அறிமுகப்படுத்த பல டைரக்டர்கள் அவரை தேடி சென்றனர். ஆனால் அவரது குடும்பத்தார் அந்த வாய்ப்புகளை மறுத்துவிட்டனர். இந்நிலையில் இந்தியில் தடக் படம் மூலம் அவர் அறிமுகம் ஆகிறார். இப்படம் இம்மாதம் ரிலீசாகிறது.தனது தாயார் மறைவுக்கு பிறகு நடிக்கும் படம் இது. இந்நிலையில் தமிழில் அவரை வெங்கட் பிரபு தனது படத்தில் அறிமுகம் செய்ய உள்ளார் என இணையதளத்தில் தகவல் பரவியது.வெங்கட் பிரபு இயக்கி வரும் பார்ட்டி படத்தை அடுத்து இயக்க உள்ள படத்தில் ஜான்வியை நடிக்க வைக்கிறார் என பேசப்பட்டது. இது எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை.
இதுகுறித்து வெங்கட் பிரபு கூறும்போது, இது போன்ற வதந்திகளை பரப்பவேண்டாம் எனவும் நான் இன்னும் அடுத்த படத்தை பற்றி யோசிக்கவில்லை என்றும் கூறினார்.