நான் என்ன பாவம் செய்தேன்…எனக்கு ஏன் இவ்வளவு பெரிய தண்டனை..கதறிய முருகதாஸ்…அசத்திய விஜய்….!!

Default Image

“சர்கார் படம் என்னுடைய படம் அதனால் இந்த விவகாரத்தில் பார்த்து பண்ணுங்க என்று விஜய் என்னிடம் கூறவில்லை. உங்களது மனதுக்கு எது நியாயமாக படுகிறதோ அதை செய்யுங்கள் என்று கூறினார். விஜய்யின் பெருந்தன்மையை அவரது ரசிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும் ” என்று தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவர் இயக்குநர் பாக்யராஜ் கூறியுள்ளார்.
சர்கார் பட கதை திருட்டு விவகாரத்தில் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவர், இயக்குநர் கே.பாக்யராஜ் முதன்முறையாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், 2007-ம் ஆண்டு வருண் பதிவு செய்த செங்கோல் கதை மற்றும் ஏ.ஆர்.முருகதாஸின் சர்கார் பட கதை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டிருந்தது. விவாதத்தின் முடிவில் இரு கதைகளும் ஒன்றுதான் என்பது உறுதியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் வருணின் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு தடை செய்ய மாட்டோம் எனவும், அதே சமயம் முழுமையாக உதவ முடியாததற்கு வருந்துவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இதுதான் சர்கார் பட கதை திருட்டு விவகாரத்தின் தொடக்கப்புள்ளி.

இந்நிலையில் இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கு வந்த போது, சர்கார் படத்தின் மூலக்கதை செங்கோல் கதைதான் என்பதை படத்தின் தயாரிப்பு நிறுவனம் மற்றும், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ஒப்புக் கொண்டுள்ளனர். மேலும் பட டைட்டிலில் வருண் ராஜேந்திரனின் பெயரை வெளியிடுவதாகவும் ஒப்புதல் அளித்தனர். இதனால் வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
இதற்குப் பின்னர் இயக்குநர் கே.பாக்யராஜ் மற்றும் வருண் ராஜேந்திரன் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பாக்யராஜ், “கதை சம்பந்தமாக எனக்கும் முருகதாஸுக்கும் சிறு கருத்து வேறுபாடு இருந்தது. அவரிடம் கசகசப்பில்லாமல் போய் விடலாம் என்று முன்பே பேசி முயற்சித்தேன் . முருகதாஸ் என்னை தப்பாக பேசிவிடுவார்கள், நான் தான் கதையை உருவாக்கினேன் என்று கூறினார். ஒரே கதைக்கருவை 10 வருடத்திற்கு முன்னதாகவே யோசித்திருக்கிறார் அவருக்கான அங்கீகாரத்தை கொடுக்க வேண்டும் என்று முருகதாஸிடம் வலியுறுத்தினேன். ஆனால் அதை அப்போது மறுத்த முருகதாஸ், தற்போது ஒப்புக் கொண்டிருக்கிறார். இதனால் பிரச்னை சுமூகமாக முடிந்து விட்டது. மகிழ்ச்சியாக இருக்கிறது
இந்த விவகாரத்தில் நிறைய பாதிக்கப்பட்டது நான் தான். விஜய் நடித்த படத்திற்கு தடை ஏற்படுத்துவது நோக்கமல்ல. வருண் ராஜேந்திரன் தனக்கான அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் நீதிமன்றம் வந்தார். விஜய் ரசிகர்கள் என்னை தவறாக புரிந்து கொண்டனர். எனது மகன் விஜய் ரசிகர்தான்.
இந்த விவகாரத்தில் விஜய்யை பாராட்ட வேண்டும். நான் அவருக்கு போன் செய்தேன். அப்போது அவர் என்னுடைய படம் பார்த்து பண்ணுங்க என்று சொல்லவில்லை. உங்களது மனதுக்கு எது நியாயமாக படுகிறதோ அதை செய்யுங்கள், முருகதாஸ் இதை சட்டரீதியாக அணுக நீதிமன்றத்திற்கு சென்றிருக்கிறார் என்று கூறினார். விஜய்யின் பெருந்தன்மையை அவரது ரசிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும். நான் தவிர்க்க முடியாத காரணத்தினால் தான் படத்தின் கருவை வெளியில் கூறினேன்” இவ்வாறு கே.பாக்யராஜ் கூறினார்.
dinasuvadu.com 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்