நாடோடிகள் 2 : தோழமையுடன் அழைக்கிறது..!

Default Image

கடந்த 2009-ஆம் ஆண்டு புரட்சி இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கத்தில் வெளியான படம் ‘நாடோடிகள்’. இந்த படத்தில் இயக்குநர் சசிகுமார் ஹீரோவாகவும்,  விஜய் வசந்த், பரணி, அனன்யா, அபிநயா, கஞ்சா கருப்பு, ஜெயப்பிரகாஷ் என பெரிய நட்சத்திரக் கூட்டமே இருந்தது.இந்தப்படம் நட்பை ஆதாரமாக கொண்டு உருவாக்கப்பட்டது. இந்த படம் நட்பிற்கு புதிய ஒரு இலக்கணத்தை வகுத்தது.

Image result for நாடோடிகள்’. 2தற்போது, இதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. சமுத்திரக்கனியே இயக்கிவரும் இப்படத்தை ‘மெட்ராஸ் எண்டர்ப்ரைசஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.நந்தகோபால் தயாரிக்கிறார். இதிலும் ஹீரோவாக சசிகுமாரே நடித்துள்ளாராம். சசிகுமாருக்கு ஜோடியாக அஞ்சலி, அதுல்யா ரவி என டபுள் ஹீரோயின்கள் உள்ளனர்.மேலும், ‘பிக் பாஸ்’ புகழ் பரணி, நமோ நாராயணன் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கும் இதற்கு என்.கே.ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு தேனி மற்றும் மதுரையில் நடைபெற்று முடிவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.சமீபத்தில், வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், படத்தின் புதிய டீசரை நடிகர் ஆர்யா தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த படத்தின் 2வது டீசர் வந்துள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

today LIVE
tvk vijay
deepika padukone l & k
Stalin's announcement Prison sentence
game changer shankar
gold price
TNAssembly