நாங்க சும்மாவே இருக்க மாட்டோம்ல….! ‘கேப்’ இல்லாம படம் நடிக்கும் விஜய் சேதுபதி…!!!!
விஜய் சேதுபதி நடித்து இந்த ஆண்டு ஏற்கனவே ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன், ஜூங்கா’ ஆகிய படங்கள் வெளியாகி உள்ளன. இதில், ஜூங்கா மட்டுமே மிகச் சுமாராக ஓடியது. அடுத்து இந்த ஆண்டு முடிய உள்ள நான்கு மாதங்களில் விஜய் சேதுபதி நடித்துள்ள நான்கு படங்கள் வெளியாகிவிடும் நிலை உள்ளது.
இந்த மாதம் 27ம் தேதி, செக்க சிவந்த வானம் படம் வெளியாகிறது. அதற்கடுத்த வாரமே அக்டொபேர் 4ம் தேதி ’96’ படம் வெளியாக உள்ளது. அதன் பிறகு ‘சீதக்காதி’ படமும். சூப்பர் டீலக்ஸ் படமும் வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு வார இடைவெளிக்குள் ‘செக்க சிவந்த வானம், 96 ‘ ஆகிய படங்கள் வெளிவருவதும் உகந்த சூழல் அல்ல திரையுலகில் சிலர் கருதுகிறார்கள்.
ஆனால், ‘செக்க சிவந்த வானம் ‘ படம் மல்டி ஸ்டார் என்பதால் பிரச்சனையில்லை. மணிரத்தினம் படம் என்றுதான் பாராட்டுவார்கள். அதில் படித்தவர்களுக்கு அவ்வளவாகாபி பெயர் கிடைக்காது. எனவே, அது விஜய் சேதுபதியை அதிகம் பாதிக்காது. ’96’ படம் மீது எதிர்பார்ப்பு இருப்பதால் அதன் ரிசல்ட் தான் விஜய் சேதுபதியின் அடுத்த வெளியீடுகளான ‘சீதக்காதி, சூப்பர் டீலக்ஸ்’ ஆகிய படங்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும்.