தனியார் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி பெரும் வரவேற்பை பெற்றது. ‘பிக்பாஸ்’ முதல் தொடரில் நடிகைகள் ஓவியா, ஆர்த்தி, நமீதா, பிந்துமாதவி, காயத்ரி. நடிகர்கள் ஆரவ், கணேஷ் வெங்கட்ராம், கவிஞர் சினேகன், வையாபுரி, சக்தி, கஞ்சாகருப்பு, பரணி உள்பட 15 பேர் பங்கேற்றனர்.
வெளியுலக தொடர்பு இல்லாமல் தனிவீட்டில் இருக்கும் இவர்கள் தினந்தோறும் சந்திக்கும் பிரச்சினைகள், உடன் இருப்பவர்களுடன் பழகும் முறை, இவர்களுடைய தினசரி நடவடிக்கைகள் ஆகியவை 100 நாட்கள் ஒளிபரப்பாகின.
கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று தனிவீட்டில் இருப்பவர்களின் நடவடிக்கைகள் பற்றி அறிந்து கொள்வார். அவர்களுடன் கலந்துரையாடுவார். அறிவுரைகளை வழங்குவார். வாரந்தோறும் ஒருவர் நிகழ்ச்சியில் இருந்து நீக்கப்படுவார்.
இதில் கமல்ஹாசனின், உரையாடல், அறிவுரை, அந்த அந்த நாட்களுக்கு ஏற்ப இடம் பெற்ற அவரது பேச்சு ஆகியவை மிகவும் ரசிக்கப்பட்டது. அரசியல் குறித்தும் பேசினார். இதனால் இந்த நிகழ்ச்சிக்கு வரவேற்பு அதிகமாக இருந்தது.
முதல் நிகழ்ச்சியில் நடிகர் ஆரவ் கடைசி வரை இடம் பெற்று பரிசை வென்றார். நடிகை ஓவியா உள்பட பலருக்கு சினிமா வாய்ப்புகள் அதிகமாகின. ‘பிக்பாஸ் 2’ நிகழ்ச்சியை நடத்துவது யார் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது.
கமல்ஹாசன் ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சியை தொடங்கி தீவிர அரசியலில் இறங்கியுள்ளார். எனவே, அவர் ‘பிக்பாஸ் 2’ நிகழ்ச்சியை நடத்த மாட்டார். சூர்யா, அரவிந்சாமி அல்லது பிரபல ஹீரோ ஒருவர் நடத்துவார் என்று கூறப்பட்டது. ஆனால், இப்போது கமல்ஹாசனே இந்த நிகழ்ச்சியை மீண்டும் நடத்துகிறார் . அதற்கான டீசர் வெளியானது .தற்போது அதன் மற்றொரு ப்ரோமோ ஒன்றை வெளியிட்டது விஜய் டிவி .
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…
திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…
மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…
சென்னை : இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுதுவம் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தினங்கள்…
சென்னை :கரும்புச்சாறை வைத்து பொங்கல் ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்: பச்சரிசி…
சென்னை: துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின்…