இந்திய சினிமா வரலாற்றில் தனக்கென்று ஒரு இடத்தை தக்கவைத்திருந்த கவர்ச்சி நடிகை சில்க்சுமிதா தற்கொலை செய்து கொண்டபோது அதிரச்சியடைந்த லட்சக்கணக்கான ரசிகர்கள் வேதனைப்பட்டதை விட எனது வேதனையும் துயரமும் அதிகமாகவே இருந்தது.
நன்றாக ஞாபகமிருக்கிறது.தோழர் கே.சி.கே வும் நானும் இது குறித்து கவலையைப்பகிர்ந்து கொண்டது.
அக்காலத்தில் எத்தனையோ கவரச்சி நடிகைகள் வலம் வந்த போதும் என்னால் சுமிதாவை கவர்ச்சி நடிகையாகப் பார்க்கத்தோணவில்லை.
ஏதோ ஒரு புரியாத காரணம்
சுமிதா என்னை ஆக்கிரமித்திருந்தார்.
எப்போதும் அவர் முகத்தில் தெரியும் கவலை ரேகைகள்.
இன்றைய தமிழ் இந்துவில் தோழர் இளவேனில் சுமிதா குறித்து எழுதிய கட்டுரை
எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக்கொடுத்தது.
“ராணுவ பலத்தில் நின்ற பட்டேல் இரும்பு மனிதரா?
ராணுவத்தை எதிரத்து நின்ற
எளிய மக்கள் இரும்பு மனிதர்களா ? ”
தெலுங்கானா போராட்ட வரலாறு குறித்து தோழர் இளவேனில் அவர்களுடன் சுமிதா உரையாடியபோது நடிகை சில்க் சுமிதா சொன்னது.
சரி அக்கட்டுரையை நீங்களும் படியுங்கள்
சில்க்சுமிதா மீதான ஈர்ப்புக்கு இன்றுதான் எனக்கு விடை கிடைத்தது. தோழர் சில்க் சுமிதா.
-நெல்சன் பாபு ,கோயம்புத்தூர்
இவரது இயற்பெயர் விஜயலட்சுமியாகும் .இவர் 2 டிசம்பர் 1960 அன்று
எலுரு, ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் பிறந்தார். இவர் தமிழில் நடிகரும் இயக்குனருமான விணு சக்கவர்த்தி இயக்கத்தில் 1979ல் “வண்டி சக்கரம்” என்னும் படத்தில் அறிமுகமானார்.1980 களில் அவர் ஒரு பெரிய பாலின(செக்ஸ்) அடையாளமாகவும், மிகவும் விரும்பப்பட்ட சிற்றின்ப(erotic) நடிகையாகவும் ஆனார்.
இவர் 17 ஆண்டுகளில் மலையாளம், தெலுங்கு, தமிழ், கன்னடா மற்றும் இந்தி மொழிகளில் 450 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.இவர் சென்னையில் 3 செப்டம்பர் 1996 அன்று தனது 35வது வயதில் தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை : நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் கடந்த 2004-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களுக்கு இரண்டு…
ஹைதராபாத் : ஐபிஎல் போட்டிகள் என்றால் எந்த அளவுக்கு அதிரடியாக இருக்கவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில்…
புதுச்சேரி : நாளை(நவ.28) புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்கிற அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கனவே, நேற்று இன்று…
சிங்கப்பூர் : உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் கடந்த நவம்பர் 25-ஆம் தேதி தொடங்கியது. இன்று…
செங்கல்பட்டு : திருப்போரூர் அருகே கார் மோதி 5 பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பகுதியில் உள்ள…
சென்னை : பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தற்போதைய தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது என்றும், அதற்கு மாற்றாக சமூகநீதி அடிப்படையில், தமிழ்நாட்டிலுள்ள…