நயன்தாராவிற்கு முன்பே தோழரான கவர்ச்சி புயல் சில்க் சுமிதா …! எப்படி ..?

Default Image

இந்திய சினிமா வரலாற்றில் தனக்கென்று ஒரு இடத்தை தக்கவைத்திருந்த கவர்ச்சி நடிகை சில்க்சுமிதா தற்கொலை செய்து கொண்டபோது அதிரச்சியடைந்த லட்சக்கணக்கான ரசிகர்கள் வேதனைப்பட்டதை விட எனது வேதனையும் துயரமும் அதிகமாகவே இருந்தது.

நன்றாக ஞாபகமிருக்கிறது.தோழர் கே.சி.கே வும் நானும் இது குறித்து கவலையைப்பகிர்ந்து கொண்டது.

அக்காலத்தில் எத்தனையோ கவரச்சி நடிகைகள் வலம் வந்த போதும் என்னால் சுமிதாவை கவர்ச்சி நடிகையாகப் பார்க்கத்தோணவில்லை.

 

ஏதோ ஒரு புரியாத காரணம்
சுமிதா என்னை ஆக்கிரமித்திருந்தார்.
எப்போதும் அவர் முகத்தில் தெரியும் கவலை ரேகைகள்.

இன்றைய தமிழ் இந்துவில் தோழர் இளவேனில் சுமிதா குறித்து எழுதிய கட்டுரை
எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக்கொடுத்தது.

“ராணுவ பலத்தில் நின்ற பட்டேல் இரும்பு மனிதரா?
ராணுவத்தை எதிரத்து நின்ற
எளிய மக்கள் இரும்பு மனிதர்களா ? ”

தெலுங்கானா போராட்ட வரலாறு குறித்து தோழர் இளவேனில் அவர்களுடன் சுமிதா உரையாடியபோது நடிகை சில்க் சுமிதா சொன்னது.

சரி அக்கட்டுரையை நீங்களும் படியுங்கள்

சில்க்சுமிதா மீதான ஈர்ப்புக்கு இன்றுதான் எனக்கு விடை கிடைத்தது. தோழர் சில்க் சுமிதா.

-நெல்சன் பாபு ,கோயம்புத்தூர்

இவரது இயற்பெயர் விஜயலட்சுமியாகும் .இவர் 2 டிசம்பர் 1960 அன்று
எலுரு, ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் பிறந்தார். இவர் தமிழில் நடிகரும் இயக்குனருமான விணு சக்கவர்த்தி இயக்கத்தில் 1979ல் “வண்டி சக்கரம்” என்னும் படத்தில் அறிமுகமானார்.1980 களில் அவர் ஒரு பெரிய பாலின(செக்ஸ்) அடையாளமாகவும், மிகவும் விரும்பப்பட்ட சிற்றின்ப(erotic) நடிகையாகவும் ஆனார்.

இவர் 17 ஆண்டுகளில் மலையாளம், தெலுங்கு, தமிழ், கன்னடா மற்றும் இந்தி மொழிகளில் 450 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.இவர் சென்னையில் 3 செப்டம்பர் 1996 அன்று தனது 35வது வயதில் தற்கொலை செய்து கொண்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்