நடிகர் சல்மான் கான் மானை வேட்டையாடிய வழக்கிலிருந்து ஜாமீனில் வெளிவந்துள்ள நிலையில் , தனக்குத் துணையாக நின்ற அனைவருக்கும் நன்றி என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
1998 ஆம் ஆண்டு மானை வேட்டையாடிய வழக்கை விசாரித்து வந்த ஜோத்பூர் நீதிமன்றம், ஏப்ரல் 5 ஆம் தேதியன்று 201 பக்கத் தீர்ப்பை வழங்கியது. வனப் பாதுகாப்பு சட்டத்தை சல்மான் கான் மீறியதாக அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து ஜாமின் கோரி சல்மான் கான் மனு தாக்கல் செய்திருந்தார். அதனை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு கடந்த சனிக்கிழமை நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.