நன்றி மறக்காத தளபதி… தன்னை வளர்த்து கேப்டனுக்கு செய்த உதவி..!

Default Image

தளபதி விஜய் தன்னை ஏற்றி விட்ட கேப்டன் விஜயகாந்திற்கு செய்ய இருக்கும் நன்றிகடனால் கோலிவுட்டே ஆனந்த அதிர்ச்சியில் உள்ளனர்.

நன்றி மறக்காத தளபதி… தன்னை வளர்த்து விட்ட கேப்டனுக்கு செய்யும் உதவி

விஜய் என்றால் அனைவருக்கும் கொள்ளை பிரியம். இவருக்கு இந்த பிரிவில் தான் ரசிகர்கள் என்பது இல்லை. எல்.கே.ஜி செல்லும் பாப்பா முதல் குடுகுடு கிழவி வரைக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இன்று தமிழ் சினிமாவில் இவரை தளபதி என செல்லமாக அழைத்து வருகிறார்கள். இவரின் திரைப்பயணத்தை விஜயின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தான் தொடங்கி வைத்தார். “நாளைய தீர்ப்பு” என்கிற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.இதை தொடர்ந்து, தந்தையின் இயக்கத்திலேயே அதிக படங்களில் நடித்தார். அங்கு ஆரம்பித்த அவரின் திரை வாழ்வு, இன்று மெர்சல் படம் வரை வந்திருக்கிறது.

அதிலும், விஜயின் படங்களில் பெரிய நடிகர் நடித்தால் அவரின் திரை வாழ்வில் பெரிய ஏணியாக இருக்கும் என எண்ணிய எஸ்.ஏ.சந்திரசேகர். விஜயின் செந்தூர பாண்டி படத்தில் நடிக்க வேண்டும் என கேப்டன் விஜயகாந்தை அணுகினார். அப்போது, டாப் நாயகனாக இருந்த விஜயகாந்த் எந்த மறுப்பும் சொல்லாமல் நடித்தும் கொடுத்தார். படமும் சூப்பர் ஹிட் அடித்தது.

விஜய் தனக்கு நல்லது செய்தவர்களை பெரிதாக மறக்கமாட்டார். இதை தற்போதும் நிரூபித்து இருக்கிறார். இன்று தான் தளபதியாக இருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் விஜயகாந்த் தான். அவருக்காக கேப்டனின் இரண்டாவது மகன் சண்முக பாண்டியனை வைத்து படத்தை தயாரிக்க முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இதனால், பல இயக்குனர்களிடம் விஜய் கதை கேட்க தொடங்கி இருக்கிறார். விரைவில் கதை கிளிக்கானவுடன் படப்பிடிப்பையும் பரபரப்பாக முடித்து சண்முக பாண்டியனுக்கு ஒரு ப்ரேக் கொடுக்க இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பேச்சுகள் அடிப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்