நண்பனை தொடர்ந்து மீண்டும் விஜய்யுடன் இணையும் ஜீவா..!
நடிகர் விஜய்யுடன் ஜீவா மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் தற்போது இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கான படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஏ.ஆர்.முருகதாஸின் படத்திற்கு பிறகு இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஜீவாவின் தந்தை ஆர்.பி.சவுத்ரியின் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படத்தை விஜய்யை வைத்து தயாரிக்க திட்டமிட்டுள்ளனராம். இந்நிறுவனம், இதற்கு முன்னதாக ’ஜில்லா’ படத்தை தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜில்லா படத்தில் விஜய்யுடன் நடனம் ஆடிய நடிகர் ஜீவா ’நண்பன்’ படத்திலும் நடித்திருந்தார். இதையடுத்து விஜய்யின் அடுத்த படத்தில் ஜீவா இணைந்து நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்