நடிப்புக்கு குட் பை…சினிமாவை விட்டு விலகும் சாய்பல்லவி..? அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

Default Image

நடிகை சாய் பல்லவிக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் பற்றி சொல்லியே தெரியவேண்டாம். அந்த அளவிற்கு அவருக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. இவர் ஜார்ஜியாவில் மருத்துவ படப்பிடிப்பு படித்திக்கொண்டிருந்த போது தான் இவருக்கு பிரேமம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

SaiPallavi
SaiPallavi [Image Source: Twitter ]

பிறகு படத்திலும் அருமையாக நடித்து மக்கள் மனதை கொள்ளையடித்து, மருத்துவ படிப்பையும் முடித்தார். இந்த நிலையில், ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், சாய் பல்லவி சினிமாவில் இருந்து விலகப்போகிறாராம்.

இதையும் படியுங்களேன்-சம்பளமே வேண்டாம்…சூப்பர் ஸ்டாரை பின்பற்றிய விஜய்.! தளபதி 67-ல் எடுத்த அதிரடி முடிவு…?

Sai Pallavi Nurse
Sai Pallavi Nurse [Image Source: Twitter ]

நடிகை சாய் பல்லவி தனது சொந்த ஊரான கோயம்புத்தூரில் மருத்துவமனை ஒன்று கட்ட திட்டமிட்டுள்ள்ளாராம். படித்த படிப்பை வீணாக்க கூடாது என்று எண்ணி சாய் பல்லவி மருத்துவமனை கட்டி அதை மட்டுமே கவனித்துக்கொள்ள திட்டமிட்டுள்ளாராம். இதனால் அவர் சினிமாவில் இருந்து விலகப்போவதாகும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Sai Pallavi
Sai Pallavi [Image Source: Twitter ]

முழுவதுமாக சாய்பல்லவி சினிமாவில் இருந்து விலகிப்போகிறாரா அல்லது மருத்துவமனை கட்டிக்கொண்டு அதிலும் சினிமாவிலும் ஆர்வம் காட்டப்போகிறாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இவர் கடைசியாக சூர்யா தயாரிப்பில் வெளிவந்த கார்க்கி படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்