நடிகை பிபாஷா பாசு நடுராத்திரியில் ரவுடிகளிடம் சிக்கியபோது..!
பிரபல நடிகை பிபாஷா சினமா துறையில் பல இளம் ரசிகர்களை கொண்ட நடிகை .
நியூயார்க்கில் இருந்து ஓராண்டு கழித்து இந்தியா திரும்பியபோது சூழல் கடினமாகியிருந்தது, யாரும் என்னை நினைவில் வைத்திருக்கவில்லை. ஒரு மாடலிங் ஏஜன்சியினர் என்னை, ஒரு மோசமான பகுதியில் தங்க வைத்தனர். மும்பையில் எனது நண்பரும் புகைப்படக் கலைஞருமான பரோ சோத்தியா, முரடர்கள், ரவுடிகள் நிறைந்த அந்தப் பகுதியில் நான் தங்க வைக்கப்பட்டது குறித்து வருத்தப்பட்டார். நான் அங்கிருந்து தினமும் அதிகாலையில் கிளம்பிவிடுவேன், தாக்குவதற்குத் தயாராய் எப்போதும் என் பேக்கில் ஒரு சுத்தியல் இருக்கும். நல்லவேளையாக நான் அதைப் பயன்படுத்தும் நிலை ஏற்படவில்லை.
சிறந்த புகைப்படக் கலைஞர்களுக்கு எனது படத்தை அனுப்ப பரோ உதவி செய்தார். அதன் விளைவாக, விரைவிலேயே எனக்கு நல்ல வாய்ப்புகள் வரத் தொடங்கின. தினமும் இரவு வெகு நேரம் கழித்துத்தான் தங்குமிடத்துக்குத் திரும்புவேன், பாதி நாட்கள், திரும்ப அழைத்துவரும் காரிலேயே உறங்கி யிருப்பேன்.
ஒரு நாள் இரவு அப்படி நேரங்கழித்து திரும்பிக் கொண்டிருந்தபோது, சில ரவுடிகள் எங்கள் காரை பின்தொடரத் தொடங்கினர். எனது கார் டிரைவர் எப்படியோ அவர்களை ஏமாற்றி, என்னைப் பத்திரமாக என் இருப்பிடத்தில் கொண்டுபோய் சேர்த்தார். கடைசியில் ஒருவழியாக நான் அந்தப் பகுதியில் இருந்து மாறி, பாதுகாப்பான பிரீச் கேண்டி பகுதிக்குப் போய்ச் சேர்ந்தேன்.
மாடலிங் என்பது மிகவும் போட்டி நிறைந்த பணி, இங்கு நுழைவதே கடினம். ஆனால் நான் எப்போதும் என் தன்மானத்தை விட்டுக்கொடுத்ததே இல்லை. ஒருமுறை, ஒரு பேஷன் ஷோவின்போது சீனியர் மாடல்கள் சிலர், என்னையும் இன்னொரு புதுமுகப் பெண்ணையும் காபி எடுத்துவரும்படி கூறினார்கள்.
அந்த புதுப்பெண் எழுந்துவிட்டாள், ஆனால் நான் அசையவே இல்லை. ‘உங்களுக்கு வேணும்னா நீங்களே போய் எடுத்துக்கங்க’ என்றேன். எனது இம்மாதிரியான செயல்பாடுகளால், நான் நிறைய கிண்டலடிக்கப்படுவதும் நடக்கும். அதிர்ஷ்டவசமாக சிலர் எனக்கு ஆதரவாக இருந்தனர், எப்போதும் அவர்கள் என்னை கவனித்துக்கொண்டனர். ஆனால் சீனியர் மாடல் களின் தொந்தரவு எனக்குத் தொடர்ந்து கொண்டே இருந்தது.
எனது முதல் படமான ‘அஜ்னபி’ படத் தயாரிப்பாளர்கள் என்னை ஒரு பேஷன் ஷோவில் பார்த்துவிட்டு, இரட்டை இயக்குநர்கள் அப்பாஸ் – மஸ்தானிடம் என்னைப் பற்றிக் கூறியிருக்கிறார். அதில் எனக்கு எதிர்மறை கதாபாத்திரம்தான். ஆனால் இயக்குநர்கள் அப்பாசும் மஸ்தானும் தங்கமானவர்கள். அவர்கள் என்னை ஒரு பெரிய நட்சத்திரம் போல நடத்தினார்கள். ‘அஜ்னபி’ படம் வெளிவந்ததும், வெற்றி பெற்றதும், அதற்குப் பின் நடந்தவையும் வரலாறு!’’ – பெருமிதத்தோடு முடிக்கிறார், பிபாஷா பாசு.