நடிகை சமந்தாவின் மாற்றம் இதுக்காகத்தான…?

Default Image
நடிகை தமன்னா தனது வீட்டில் வளர்க்கும் செல்ல நாய்க்குட்டிக்காக திடீரென்று அசைவம் சாப்பிடுவதை நிறுத்தி சைவ உணவுக்கு மாறி இருக்கிறார்.
இதுகுறித்து நடிகை தமன்னா  கூறியதாவது:–
‘‘நான் அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுவது வழக்கம். மீன் மற்றும் இறைச்சிகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தேன். வீட்டிலும், வெளியில் செல்லும்போதும் அசைவ உணவுகளைத்தான் சாப்பிடுவேன். இப்போது எனது நாய்க்குட்டிக்காக அசைவம் சாப்பிடுவதை நிறுத்திவிட்டேன்.
எனது வீட்டில் ‘பெப்பிள்’ என்ற நாய்க்குட்டியை செல்லமாக வளர்த்து வருகிறேன். எப்போதும் அந்த நாய்க்குட்டியுடன்தான் விளையாடுவேன். படப்பிடிப்பு இல்லாத நாட்களையும் அதோடுதான் செலவிடுவேன். அது வளர்ப்பு பிராணியாக மட்டுமல்லாமல் எனது குடும்பத்தில் ஒரு உறுப்பினராகவும் இருந்தது. நாய்க்குட்டிக்கும் என் மீது பாசம் அதிகம்.
கடந்த மாதம் அந்த நாய்க்குட்டிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அப்போது அது தவித்ததை பார்த்தபோது எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது. எனது அன்புக்குரிய நாய்க்குட்டிக்காக ஏதாவது ஒரு பழக்கத்தை கைவிட நினைத்தேன். அசைவம் சாப்பிடுவதை விட்டுவிட்டேன். இது சவாலானதுதான். ஆனாலும் நிறுத்திவிட்டேன்.’’என்று  தமன்னா கூறினார்.
DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்