கதாநாயகிகளுக்கு கதை பிடித்து இருந்தால், அவர்களே அந்த படத்தை தயாரிக்கவும் தயங்குவதில்லை. இதற்கு சமீபகால உதாரணம், நயன்தாரா. ‘அறம்’ படத்தின் கதை பிடித்து இருந்ததால், அவரே தயாரித்தார். படமும் பேசப்பட்டது. பெரிய வெற்றியும் பெற்றது.
நயன்தாராவைப் போல் நடிகை சதாவும் தன்னை நாயகியாக வைத்து, ‘டார்ச் லைட்’ படத்தை எடுத்து வருகிற டைரக்டர் அப்துல் மஜீத்தின் திறமையில் நம்பிக்கை வைத்து அவரது இயக்கத்தில் அடுத்த படத்தை தயாரிக்க முன்வந்துள்ளார். அதற்கு முழு காரணம், அப்துல் மஜீத் இயக்கி வரும் ‘டார்ச் லைட்’ படம்தான். பெண்களுக்கான விழிப்புணர்வு படமாக, ‘டார்ச் லைட்’ உருவாகி வருகிறது.
இந்த படம், வறுமையால் பாலியல் தொழிலுக்கு வந்த பெண்கள் பற்றி பேசுகிறது. நெடுஞ்சாலைகளில் டார்ச் லைட்டுடன் நின்று கொண்டு லாரி டிரைவர்களிடம் பாலியல் தொழில் செய்யும் பெண்கள் பற்றிய கதை, இது.
பெண்களை போகப்பொருளாக்கி, அவர்களை தங்கள் இச்சையை தீர்க்கும் ஒரு நுகர் பொருளாக்கி விடும் சமூக அவலத்தையும், அதன் பின்னணியில் இயங்கும் இழிவான ஆண்களையும், இந்த படம் தோலுரிக்கிறது. சம்பவங்கள் முழுவதும் 90-களில் நடப்பது போல் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. சென்னை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கோவில்பட்டி, குற்றாலம் ஆகிய இடங்களில் படம் வளர்ந்து இருக்கிறது.
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்தார். இது விபத்தா?…
சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைக்கும் பொருட்டு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் 13 கிராமங்களை சேர்ந்த ஊர்மக்கள் 900…
வங்கதேசம் : கிரிக்கெட்அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தன்னுடைய…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தான் கட்சி தொடங்குவதற்கு முன்னர், இலங்கையில் விடுதலை புலிகள் அமைப்பின்…
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் பிக் பாஸ் போட்டி மிகவும் பிரபலம். இந்த பிக் பாஸ்…
டெல்லி : கோ கோ உலக கோப்பை போட்டிகள் கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி நேற்று (ஜனவரி 19)…