நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு புதிய நண்பராக விஷால் கிடைத்துள்ளாராம்..!!
விஷால், கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படம் ‘சண்டகோழி 2’. லிங்குசாமி இயக்குகிறார். யுவன் சங்கர்ராஜா இசை அமைக்கிறார். இதில் நடித்ததுபற்றி கீர்த்தி சுரேஷ் கூறும்போது, ’இப்படம் மூலம் எனக்கு நல்ல நண்பராக விஷால் கிடைத்திருக்கிறார். சாவித்ரி வாழ்க்கை சரித்திர படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோதுதான் இப்படத்திலும் நான் நடித்து வந்தேன். அந்த படத்தில் சோகம், ஆக்ரோஷம் என பலவிதமான காட்சிகளில் நடித்து டென்ஷனாக இருப்பேன்.
இதற்கிடையில் சண்டகோழி 2ம் பாகம் படப்பிடிப்புக்கு வரும்போது ரொம்பவும் ஜாலியான சூழல் நிலவும். விஷால், லிங்குசாமி எல்லோருமே படக்குழுவை உற்சாகப்படுத்தி ஷூட்டிங் நடத்திச் செல்வார்கள். இதனால் சாவித்ரி படத்தில் நடித்தபோது ஏற்பட்ட டென்ஷன் இதில் குறைந்து ரிலாக்ஸ் ஆகிவிடுவேன்’ என்றார். விஷால் கூறும்போது,’சண்டகோழி 2ம் பாகம், முதல் பாகத்தைவிட இன்னும் நன்றாக வந்திருக்கிறது.
அந்தப்படத்தின் மூலம் இயக்குனர் லிங்குசாமி என்னை ஒரு ஆக்ஷன் ஹீரோவாக நிலைநிறுத்தினார். முதல்பாகத்தில் மீரா ஜாஸ்மின் நடித்திருந்தார். 2ம் பாகத்தில் அவரது கதாபாத்திரத்தை யார் ஏற்றால் பொருத்தமாக இருக்கும் என ஆலோசித்தபோது கீர்த்தி சுரேஷை ஒப்பந்தம் செய்தோம். படத்துக்கு பெரிய பலமாக ராஜ்கிரண் கதாபாத்திரம் அமைந்திருக்கிறது. யுவன்சங்கர்ராஜாவின் இசையில் பாடல்கள் அனைவருக்கும் பிடிக்கும் வகையில் வந்திருக்கிறது’ என்றார்.
DINASUVADU