நடிகை ஏஞ்சலினா ஜோலீ சிரியா அகதிகளை சந்தித்தார்!
ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலீ ஐ.நா.சபையின் சிறப்புத் தூதராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், ஈராக்கின் குர்திஸ்தான் பகுதியில் உள்ள சிரியா அகதிகள் முகாமை பார்வையிட்டார்.
இங்கு 33 ஆயிரம் அகதிகள் தஞ்சம் அடைந்துள்ளனர். சிரியா உள்நாட்டு போரால் பெண்களும் குழந்தைகளும் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக அவர்கள் கூறியதை கவனமாக கேட்ட ஏஞ்சலினா ஜோலி, முகாமில் இருந்த குழந்தைகளுடன் கலந்துரையாடினார்.
அகதிகள் முகாமில் அடிப்படை வசதிகள், வர்த்தக வசதிகளை ஏற்படுத்த ஐநா.சபையின் மனித உரிமை ஆணையம் நிதி உதவியை அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.