நடிகையின் ட்வீட்டர் மர்ம கும்பலால் ஹெக்…..பதறிய நடிகை போட்ட ட்வீட்….!!!

Default Image

நடிகை த்ரிஷா நடிகர் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடித்து சமீபத்தில் வெளியான 96 படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
Related image
இதனை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்துக்கு ஜோடியாக ‘பேட்ட’ படத்தில் நடித்து வருகிறார் நடிகை த்ரிஷா.சமூக வலைதளங்களில் தீவிரமாக செயல்படும் நடிகை திரிஷா பேட்ட படம் பற்றி ட்விட்டரில் பகிர்ந்து இருந்த நிலையில் இன்று அதிகாலை திரிஷாவின் ட்விட்டர் கணக்கை மர்ம கும்பல் கைப்பற்றியதாக தகவல் பரவியது. திரிஷா இதுபற்றி தனது நண்பர்களுக்கும்,ரசிகர்களுக்கும் எச்சரிக்கை செய்தார்.
Related image
திரிஷாவின் தாயார் உமா கிருஷ்ணனை கூறியபோது, ‘ஏதோ ஒரு மர்ம கும்பல் திரிஷாவின் ட்விட்டர் கணக்கில் ஊடுருவி தோழிகளுக்கும், நண்பர்களுக்கும் அவரது ட்வீட்டர் கணக்கில் இருந்து தவறான வீடியோக்களையும், செய்திகளையும் அனுப்பியதை கண்டுபிடித்தோம்.
https://twitter.com/trishtrashers/status/1053441431375876096

இந்நிலையில் உடனடியாக த்ரிஷாவின் ட்விட்டர் கணக்கின் பாஸ்வேர்டை மாற்றிவிட்டோம். எனவே அந்த அறிவிப்பை திரிஷா வெளியிட்டார். அவர் தற்போது பேட்ட படப்பிடிப்புக்காக வாரணாசியில் இருக்கிறார்’ என்று கூறினார்.
Related image
திரிஷாவின் ட்விட்டர் கணக்கு ஏற்கனவே கடந்த ஆண்டு ஒரு முறை இதேபோல் ஜல்லிக்கட்டு போராட்டம் தீவிரமாக நடந்த போது ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ட்விட்டரில் கருத்து பதிந்து திரிஷாவை சிக்கலில் சிக்க வைத்தனர்.இதற்காக நடிகை திரிஷா கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்