நடிகர் விஷாலுக்கு நீதிமன்றம் நோட்டிஸ்…!!!
நடிகர் விஷால் வரி பாக்கியை செலுத்தாததால் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டுமென விஷாலுக்கு நீதிமன்றம் நோட்டிஸ் அனுப்பியுள்ளது.
நடிகர் விஷால் வீட்டில் 2016ம் ஆண்டு சேவை வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதில் அரசுக்கு ரூ.1 கோடி ரூபாய் பாக்கி கொடுக்க வேண்டி உள்ளது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, இது குறித்து விஷாலை நிதிமன்றத்தில் விளக்கமளிக்குமாறு 5 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால், இன்று நீதிமன்றத்தில் ஆஜராகும்படி விஷாலுக்கு நீதிமன்றம் நோட்டிஸ் அனுப்பியுள்ளது.