திரைப்படங்கள் மூலம் மக்களளுக்கு நல்ல எண்ணங்கள் கொடுக்க வேண்டும், அதுவே அவர்கள் தீய வழிகளில் செல்ல வழிவகுக்க கூடாது.இப்பொழுது எல்லாம் திரைப்படம் வெளிவரும் நேரங்களில் பல்வேறு கருத்துக்கள் தெரிவிப்பதும் அதற்க்கு தடை கோருவதும், வழக்கு தொடுப்பதும் வாடிக்கையாக உள்ளது.
இதனிடையில் நடிகர் விஜய் தனது 62 வது படத்தினை இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்க,இசை ஏ.ஆர்.ரஹ்மான் தொகுக்க சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்து வருகிறது .இதனிடையில் இப்படத்தின் பெயர் சர்கார் எனவும் இதன் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது .இதில் விஜய் புகை பிடிப்பது போன்ற காட்சி போஸ்டராக இரு நாட்களுக்கு முன் வெளிவந்தது .இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்த பல்வேறு தரப்பினர் கடும் கண்டனங்களை தெரிவித்தனர் .
ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் விஜய் நடிப்பில் சர்கார் படத்தின் முதல் சுவரொட்டி ( பர்ஸ்ட் லுக்) வெளியிடப்பட்டது.இதில் நடிகர் விஜய் புகைபிடிப்பது போன்ற காட்சி போஸ்டரில் வெளிவந்துள்ளது ,இதற்க்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ள ராமதாஸ் இந்த காட்சி பிஞ்சுகளின் மனதில் நஞ்சை விதைப்பது போன்றுள்ளது .படத்திற்கு விளம்பரம் தேட இதுபோன்ற சமுக பொறுப்பற்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என அவர் தெரிவித்ததோடு .
நடிகர்களுக்கு சமூகப் பொறுப்பு தேவை என்று கூறியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், சமூக அக்கறை இருந்தால் சர்கார் படத்தின் புகைக் காட்சியை நடிகர் விஜய்யும், சன் பிக்சர்சும் உடனே நீக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.நடிகர் விஜய்யின் ஒவ்வொரு படத்திற்கும் தொடர்ந்து இது போன்ற பிரச்சனைகள் திட்டமிட்டு உருவாக்கப்படுவதாக ரசிகர்கள் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர்.
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…