நடிகர் ரஜினிகாந்த் மீது சினிமா பைனான்சியர் முகுந்த் சந்த் போத்ரா தொடர்ந்த வழக்கு…!!
நடிகர் ரஜினிகாந்த் மீது சினிமா பைனான்சியர் முகுந்த் சந்த் போத்ரா தொடர்ந்த வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
சினிமா பைனான்சியர் போத்ராவுக்கும், இயக்குநர் கஸ்தூரி ராஜாவுக்கும் இடையிலான பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில், கஸ்தூரி ராஜா மீது போத்ரா வழக்கு தொடர்ந்திருந்தார். பட தயாரிப்புக்காக கஸ்தூரி ராஜாவிடம் கொடுத்த பணத்தை வசூலிக்க முடியாத நிலையில் ரஜினி மீது போத்ரா குற்றம் சாட்டியிருந்தார். பணம் பறிக்கும் நோக்கில் பைனான்சியர் போத்ரா செயல்படுவதாகவும், இதுதொடர்பான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் ரஜினிகாந்த் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பான விசாரணையின்போது, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஸ், ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ரஜினி மீது தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்ய உத்தரவிட்டார்.