முன்னணி கதாநாயகர்களில் பிஸியான கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் தனுஷ் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ மற்றும் ‘மாரி 2’ படப்பிடிப்பை முடித்தகையோடு பிரம்மாண்ட சரித்திர படம் ஒன்றை தற்போது இயக்கி வருகிறார். இப்படத்திற்கு ‘நான் ருத்ரன்’ என்று பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதில் தனுஷுடன் நாகாஜுனா, சரத்குமார், எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த், அதிதி ராவ், அனு இமானுவேல் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில் இப்படத்தில் நடித்துள்ள அதிதி ராவ் தனுஷ் இயக்கத்தில் நடிப்பது குறித்து தற்போது வாய் திறந்துள்ளார். அதில்… “முன்பே ஒருமுறை தனுசுடன் நடிக்கும் வாய்ப்பு வந்தது. கால்ஷீட் பிரச்சினையால் அது நிறைவேறவில்லை. இப்போது அவர் இயக்கத்தில் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. அவர் ஷாட் வைப்பது புதுமையாகவும் வேலை வாங்குவது எளிதாகவும் இருக்கிறது. ஒரு இயக்குனராக என்னை கவர்ந்துவிட்டார்” என்று தனுஷை பாராட்டியுள்ளார்.
DINASUVADU
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…