நடிகர் தனுஷுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி …!
உயர்நீதிமன்ற மதுரை கிளை நடிகர் தனுஷ் போலி ஆவணங்களை தாக்கல் செய்ததாக மேலூர் தம்பதி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. நடிகர் தனுஷ் தங்கள் மகன் என அறிவிக்கக்கோரி, மேலூரைச் சேர்ந்த கதிரேசன் – மீனாட்சி தம்பதியினர் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.
அந்த வழக்கின் விசாரணையின் போது நடிகர் தனுஷ் போலி ஆவணங்களை தாக்கல் செய்ததாகவும், அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி கதிரேசன் நீதிமன்ற மதுரை கிளையில் மீண்டும் மனுத்தாக்கல் செய்தார். இன்று நடந்த விசாரணையின்போது, மனு விசாரணைக்கு உகந்ததல்ல எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி ராஜமாணிக்கம் உத்தரவிட்டார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.