நடிகர் சூர்யா நடித்துள்ள “தானா சேர்ந்த கூட்டம்” படத்தை வெளியிட தடையில்லை : சென்னை உயர்நீதிமன்றம்
நடிகர் சூர்யா நடித்துள்ள “தானா சேர்ந்த கூட்டம்” படத்தை வெளியிட தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. “தானா சேர்ந்த கூட்டம்” படத்துக்கு தடை விதிக்கக் கோரி ஸ்டார் மூவிஸ் நிறுவனம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது.
இதே போல் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் இடம்பெறும் சொடக்கு பாடலில் வரும் “அதிகார திமிர, பணக்கார பவர வெரட்டி வெரட்டி வெளுக்க தோணுது” என்ற வரி குறிப்பிட்ட கட்சியை கிண்டல் செய்வது போல் உள்ளது என்று அதற்கு கண்டனம் தெரிவித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அதிமுக நிர்வாகி சதீஷ்குமார் நேற்று புகார் அளித்திருந்தார். இதனை பார்த்த நடிகர் ஆர்.ஜே. பாலாஜி, “படத்தை தாண்டி நாட்டில் நிறைய பிரச்சனை இருக்கிறது. தற்போது பஸ் இல்லாமல் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர், அவர்களுக்கு போய் முதலில் உதவுங்கள்” என பதிவு செய்துள்ளார்.இவரை போன்று திரை பிரபலங்கள் பலரும் ” தானா சேர்ந்த கூட்டம்” படத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.