தற்ப்போது ‘சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ்’ சார்பில் அவர் தயாரித்துள்ள முதல் படத்துக்கு ‘கனா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அதன் கீழே ‘உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்’ என டேக்லைன் கொடுக்கப்பட்டுள்ளது. நடிகர், பாடகர், பாடலாசிரியர் எனப் பலமுகங்கள் கொண்ட அருண்ராஜா காமராஜ், இந்தப் படத்தை இயக்கி வருகிறார்.
கிரிக்கெட் வீரராக ஆசைப்படும் மகள் – அவருடைய ஆசையை நிறைவேற்றி வைக்கப் பாடுபடும் அப்பா. இதுதான் இந்தப் படத்தின் கதை. அப்பாவாக சத்யராஜும், மகளாக ஐஸ்வர்யா ராஜேஷும் நடித்துள்ளனர். இதன் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் மே 15 அன்று வெளியாகியுள்ளது.
சிவகார்த்திகேயனின் இன்னொரு கல்லூரித் தோழரான திபு நினன் தாமஸ் இசையமைக்கிறார்.மோகன் ராஜன், ஜிகேபி, ராபிட் மேக், அருண்ராஜா காமராஜ் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். இந்தப் படத்தின் இசை உரிமையை சோனி மியூஸிக் நிறுவனம் வாங்கியுள்ளது.
இந்த படத்தை பற்றிய வெளிவந்துள்ளது. அதில் நடிகர் சிவகார்த்திகேயன் முற்றுலும் மாறுபட்ட தோற்றத்தில் உள்ளார். கனா படத்திற்க்கான ,போட்டோஷூட் நடக்கும் போது இவருக்கும் சேர்த்து நடந்தது,
இதனால் கோலிவுட் வட்டாரத்தில் இவருள்; இந்த படத்தில் நடிக்கிறார் போல என்று பேசப்படுகிறது.