நடிகர் சல்மான்கானை தாக்கினால் ரூ. 2 லட்சம் பரிசு ..!
நடிகர் சல்மான்கானைத் தாக்கினால் ரூ. 2 லட்சம் பரிசு வழங்கப்படும் என வி.எச்.பி. முன்னாள் தலைவர் பிரவீண் தொகாடியா, புதிதாக ஆரம்பித்துள்ள ‘ஹிந்து ஹி ஆகே’ என்ற அமைப்பு கொலைவெறியைத் தூண்டியுள்ளது.இந்த அமைப்பின் ஆக்ரா பிரிவுத் தலைவர் கோவிந்த் பராஷர்தான், பகிரங்கமாக நடிகர் சல்மான்கானுக்கு எதிராக கொலைவெறியைத் தூண்டியுள்ளார். சல்மான்கான் நடிப்பில் லவ்ராத்திரி என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. நவராத்திரி பண்டிகைக்கு இந்த படம் திரைக்கு வர உள்ளது. இந்நிலையில், இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக இந்த செயல் இருப்பதாகவும், எனவே, சல்மான்கானை தாக்குபவர்களுக்கு ரூ. 2 லட்சம் பரிசாக வழங்கப்படும் என்றும் கோவிந்த் பராஷர் அறிவித்துள்ளார்.
தணிக்கை வாரியம் இப்படத்தை அனுமதித்தால் அது இந்து மக்களிடையே கோபத்தை உருவாக்கும். திரையரங்குகள் தீயிட்டு கொளுத்தப்படும் என்றும் அவர் மிரட்டியுள்ளார்.