நடிகர் சல்மான்கான் ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், கொலை மிரட்டல் வந்ததை அடுத்து, அவருக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அரிய வகை மான்களை வேட்டையாடியதாகத் தொடரப்பட்ட வழக்கில் 5 ஆண்டுகள் சிறை தண்டனைபெற்ற சல்மான்கான் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக சல்மான்கான் சிறையில் அடைக்கப்படுவது இது 4வது முறை.
அவருக்கு 106 என்கிற கைதி எண் கொடுக்கப்பட்டுள்ளது. பாலியல் பலாத்கார வழக்கில் தண்டனை பெற்று கடந்த 2013ம் ஆண்டு முதல் ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சாமியார் ஆசாராம் அடைக்கப்பட்டுள்ள அறைக்கு பக்கத்து அறையில் சல்மான்கான் அடைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே சிறையில் சல்மான்கானை கொல்வேன் என அப்பகுதியைச் சேர்ந்த ரவுடி ஒருவர் மிரட்டல் விடுத்ததையடுத்து சிறைக்குள் சல்மான்கானுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இரவு உணவாக சப்பாத்தி மற்றும் குருமா வழங்கப்பட்டதாகவும் அதனை உண்ண சல்மான்கான் மறுத்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…