நடிகர் சரத்குமார்,ராதாரவி மீது காஞ்சீபுரம் போலீசார் வழக்கு பதிவு..!
நடிகர் சங்கத்தின் நில மோசடி தொடர்பாக முன்னாள் தலைவர்கள் சரத்குமார் , ராதாரவி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
காஞ்சீபுரம் மாவட்டம் வேதமங்கலம் கிரமாத்தில் நடிகர் சங்கத்திற்கு சொந்தமான 29 சென்ட் நிலத்தை கடந்த 2016 ஆம் ஆண்டு முறைகேடாக விற்றதாக நடிகர் சங்க தலைவர் சரத்குமார் ,பொதுச் செயலாளர் ராதாரவி மீது தற்போதைய நடிகர் சங்க பொதுச் செயலாளர் புகார் அளித்தார்.
இது தொடர்பாக காஞ்சீபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் நாசர் தக்க ஆவணங்களை சமர்ப்பித்தார் .
இதனை தொடர்ந்து வலக்கை விசாரணை செய்த காஞ்சீபுரம் போலீசார் சரத்குமார்,ராதாரவி,நடேசன்,நடராஜன் ஆகிய நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.