Categories: சினிமா

நடிகர் சங்க தலைவராகும் சிவன்!மகிழ்சியில் ரசிகர்கள்

Published by
Venu
நடிகர் மோகன்லால் மலையாள நடிகர் சங்க தலைவராக  போட்டியின்றி தேர்வுசெய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘அம்மா’ என்ற பெயரில் கேரளாவில் மலையாள நடிகர், நடிகைகள் சங்கம்  செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தின் தலைவராக மலையாள குணச்சித்திர, நகைச்சுவை நடிகர் இன்னசென்ட் தற்போது பதவி வகித்து வருகிறார். இவர் சாலக்குடி தொகுதி எம்.பி.யாகவும் உள்ளார்.
கடந்த 17 வருடங்களாக மலையாள நடிகர் சங்க தலைவர் பதவியில் இன்னசென்ட் இருந்து வருகிறார். இவர் பதவி ஏற்ற பிறகு நடிகர், நடிகைகளின் பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்த்துவைக்க நடவடிக்கையும் எடுத்தார். நடிகை கடத்தல் வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்ட சம்பவத்தையும் இன்னசென்ட் திறமையாக கையாண்டு நடிகர் சங்கத்தில் ஒற்றுமையை ஏற்படுத்தினார்.
இந்த நிலையில் இன்னசென்ட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அதற்கான சிகிச்சை பெற்று தற்போது குணமடைந்து உள்ளார். ஆனாலும் முதுமை மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக அவர் நடிகர் சங்க தலைவர் பதவியில் தொடர்ந்து நீடிக்க விரும்ப வில்லை.
இதனால் விரைவில் நடைபெற உள்ள நடிகர் சங்க தலைவர் தேர்தலில் தான் போட்டியிட விரும்ப வில்லை என்று இன்னசென்ட் அறிவித்துள்ளார்.
இதனால் மலையாள நடிகர் சங்கத்தின் அடுத்த தலைவர் யார்? என்ற கேள்வி எழுந்தது. மலையாள திரையுலகில் சூப்பர் ஸ்டார்களாக விளங்கும் மோகன்லால், மம்முட்டி ஆகியோரில் ஒருவர் புதிய நடிகர் சங்க தலைவராக பொறுப்பேற்க வேண்டும் என்ற பேச்சும் மலையாள படஉலகில் எழுந்தது. இந்த நிலையில் மலையாள நடிகர்சங்க தலைவர் பதவிக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்து மோகன்லால் மனு செய்து உள்ளார். இதுவரை அவரை எதிர்த்து யாரும் போட்டியிட மனு தாக்கல் செய்ய வில்லை.
இதைதொடர்ந்து விரைவில் கேரள நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் நடிகர் மோகன் லால் தலைவர் பதவிக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளார். மோகன்லால் நடிகர் சங்க தலைவராவது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

5 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

11 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

11 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

11 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

11 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

11 hours ago