நடிகர் அஜித், விஜய் மற்றும் சூர்யா பெயரில் நீதிமன்றத்தில் வழக்கு….!!!
- நடிகர் அஜித், விஜய் மற்றும் சூர்யா ஆகியோர் தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர்கள்.
- மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த நடிகர்களை மதுரை உயர்நீதிமன்றக்கிளை உத்தரவிட்டுள்ளது.
நடிகர் அஜித், விஜய் மற்றும் சூர்யா ஆகியோர் தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர்கள். இவர்கள் சினிமா துறையில் மட்டுமல்லாது, பல சேவைகளிலும் தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர்.
இவர்களது இந்த சேவைக்கு மக்கள் மத்தியில், சிறந்த வரவேற்பும் பாராட்டுக்களும் கிடைத்து வருகிறது. இந்நிலையில், ஜான்சிராணி என்பவர் முறையாக மற்றும் தொடர்ச்சியாக போலியோ சொட்டு மருந்து முகாமை நடத்த கோரி வழக்கு பதிவு செய்திருந்தனர்.
இந்த வழங்கி நடிகர்கள் விஜய், அஜித் மற்றும் சூர்யா ஆகியோரை எதிர்மனுதாரராக சேர்த்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், போலியோ சொட்டு மருந்து குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த நடிகர்களை மதுரை உயர்நீதிமன்றக்கிளை உத்தரவிட்டுள்ளது.