நடிகரின் பாலியல் விவகாரம்…நடிகர் சங்கத்தில் இருந்து ராஜினாமா…நடிகர் விளக்கம்
மலையாள திரைக்கலைஞர்கள் சங்கமான அம்மா அமைப்பு தன்னை வெளியேற்றவில்லை என்றும், தாமாகவே அதிலிருந்து விலகியதாகவும் நடிகர் திலீப் கூறியுள்ளார்.
பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி, கைதான நடிகர் திலீப், மலையாள திரைக்கலைஞர்கள் சங்கமான அம்மா அமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால், தான் வெளியேற்றப்படவில்லை என்றும், தானாவே ராஜினாமா செய்ததாகவும் தெரிவித்துள்ளார் திலீப்.முகநூலில் இந்தத் தகவலைப் பகிர்ந்துள்ளார் திலீப். அக்டோபர் 10 தேதியிட்ட ராஜினாமா கடிதத்தை, தன் பதிவுடன் திலீப் இணைத்துள்ளார். அம்மா அமைப்பு தன் பெயரால் அழியக்கூடாது என்றும், எல்லா யூகங்கள் மற்றும் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கத்தான் ராஜினாமா செய்துள்ளதாகவும் திலீப் குறிப்பிட்டுள்ளார்.

அம்மா அமைப்பின் தலைவர் நடிகர் மோகன்லால், சமீபத்தில் திலீப்பிடம் ராஜினாமா செய்யும்படி கேட்டதாகவும், அவரது ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்றும் கூறியிருந்தார். தற்போது திலீப் சொல்லும் விஷயம் இதிலிருந்து முரண்பட்டுள்ளதால், திலீப்பின் இந்தப் பதிவு புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.“மோகன்லாலை எனது மூத்த சகோதரனாகக் கருதுகிறேன். அவருடன் விரிவாக ஆலோசித்த பிறகே எனது ராஜினாமா கடிதத்தைத் தந்துள்ளேன். நான் வெளியேற்றப்படவில்லை. எனது ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்றால், அது ராஜினாமாவே தவிர, வெளியேற்றம் அல்ல” எனத் தெரிவித்துள்ளார் திலீப்.
DINASUVADU
DINASUVADU