தோனிக்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்த சிம்பு ..!நீங்க இத பண்ணுங்க தல எங்களுக்கு அது போதும் …!

Published by
Venu

நடிகர் சிம்பு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு தமிழகத்திற்கு சூனியம் பிடித்தது போல் உள்ளது, என கூறியுள்ளார்.சென்னையில் நடிகர் சிம்பு கூறியதாவது:இன்று, காலையில் நடிகர் சங்கம் சார்பில் நடந்த மவுன போராட்டத்தில், நான் கலந்து கொள்ளவில்லை. நிறைய பிரச்னை சென்று கொண்டுள்ளது. தமிழ் சினிமா ஸ்டிரைக்கில் உள்ளது. யாருக்கும் வேலையில்லை. ஒரு காரணத்திற்காக நடக்கிறது. இதற்கு குறை சொல்லவில்லை. நடிகனாக இதற்கு ஒத்துழைப்பு அளிக்கிறேன். ஜி.எஸ்.டி.,யிலிருந்து ஸ்டிரைக் வரை பல பிரச்னைகள் உள்ளன. இதற்கு அரசிடமிருந்து தீர்வு காண முடியாமல் திண்டாடி கொண்டுள்ளோம்.

Image result for சிம்பு

இதில் ஸ்டெர்லைட் , காவிரி போராட்டம் நடத்தவதில் உடன்பாடில்லை. பேசாததால் தான் இவ்வளவு பிரச்னை. பேசினால் தான் பிரச்னை தீரும். பேசாமல் நடத்தும் போராட்டத்தால் என்ன பயன். இந்தபோராட்டத்தில் உடன்பாடில்லை. இதுதவறு என்றால், மன்னித்துவிடுங்கள். அரசியல் ரீதியாகவும், மக்கள் ரீதியாகவும் பிரச்னை மேல் பிரச்னை வருகிறது. இது குறித்து சிந்தித்து பார்க்க வேண்டும். முன்னாள் முதல்வர் இறந்ததிலிருந்து தமிழகத்திற்கு சூனியம் வைத்தது போல் பிரச்னைகள் வருகின்றன. முன்னாள் முதல்வர் மரணத்தில் என்று உண்மை வெளியே வருகிறதோ அன்றுதான் தமிழகத்திற்கு விடிவு வரும்.

“சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தோனி மீண்டும் கேப்டனாக வந்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. அவர் மீது எனக்கு பெரிய மரியாதை உள்ளது. தமிழ்நாட்டின் மீதும், சென்னை மக்கள் மீதும் நாம் வைத்திருக்கும் அன்பைவிட அதிகமான அன்பை வைத்திருக்கும் ஒரு மனிதர் என்றால் அது தோனி தான். கண்டிப்பாக தோனிக்கு இந்த விவகாரம் குறித்து தெரியும். நான் அவரை எந்த போராட்டத்திலும் ஈடுபட சொல்லவில்லை. ஐபிஎல் போட்டிகளில் விளையாட வேண்டாம் என கூறவில்லை. போட்டிகளின் போது கருப்பு பேட்ஜ் அணியுங்கள் இல்லையென்றால், உங்களால் ஏதாவது செய்ய முடிந்தால் அல்லது செய்ய முடிந்ததை செய்யுங்கள் என தோனிக்கு கோரிக்கை வைக்கிறேன். தோனிக்கு நம் மீது மரியாதை உள்ளதால் இதனை அவரிடம் கேட்கிறேன்” எனத் சிம்பு  தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

பாப்கார்ன்களுக்கு 18% ஜி.எஸ்.டி ஏன்? நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம்!

ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று  நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…

2 hours ago

நிதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு – டிஜிபி உத்தரவு!

சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…

3 hours ago

மகளிர் ஒருநாள் போட்டி: இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதல்!

குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்…

4 hours ago

ஏற்றமா? இறக்கமா? ‘விடுதலை 2’ இரண்டாம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம்.!

சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, 'விடுதலை' முதல் பாகம்…

4 hours ago

திமுக செயற்குழு தீர்மானங்கள்: அமித்ஷாவை கண்டித்து… பேரிடர் நிவாரண நிதி வரை!

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக அமைச்சர்கள்,…

5 hours ago

நான் மனித நேயமற்றவனா? ‘என் பெயருக்கு களங்கம் விளைவிக்கப் பார்க்கின்றனர்’ – அல்லு அர்ஜுன்!

ஹைதராபாத்: 'புஷ்பா 2' சிறப்புக் காட்சியின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு, பெண் உயிரிழந்ததற்கு, 'போலீஸ் சொன்னதை மதிக்காமல், அல்லு அர்ஜுன்…

6 hours ago