தொடர்ந்து சாதனை படைத்துக் கொண்டு இருக்கும் விஸ்வாசம்….!!!
- நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்.
- விஸ்வாசம் திரைப்படத்திற்கு, தமிழகத்தில் மட்டும் ரூ 75.5 கோடி ஷேர் கிடைத்துள்ளது.
நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்களுக்கு எப்பொழுதுமே மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகமாக தான் இருக்கும்.
இந்நிலையில் நடிகர் அஜித், சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து கடந்த மாதம் 10-ம் தேதி வெளியான படம் விசுவாசம். இந்த படம் ரிலீஸ் 50 நாட்களை தாண்டியும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில், இப்படத்தின் தமிழக ஷேர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுவரை தமிழகத்தில் மட்டும் ரூ 75.5 கோடி ஷேர் கிடைத்துள்ளது. இதன் மூலம் அதிக ஷேர் கிடைத்த படங்களில் விஸ்வாசம் 2-ம் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.
மேலும் பாகுபலி 2 திரைப்படம் 83 ஷேர்களை பெற்று முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. .